விலை போகவில்லையே என்று வருந்தாதே - விழியிசை
- RithuPedia
- May 25, 2025
- 1 min read

மனை இருந்தால் மணவாளன்
மங்கையை காண மண் குதிரையில் வருவான்
பணம் இருந்தால் பட்டணத்தில் இருந்து பட்டதாரி கூட பரிவாரங்கள் உடன் வருவான்
அழகு இருந்தால் அடங்கா காளையாக திமிரிக் கொண்டு அலைபவனும் ஆசையோடு வருவான்
தொழில் இருந்தால் தோழன் கூட தோழமை மறந்து தோள் சாய்த்திட வருவான்
நல்ல மனம் இருந்தும் நல்ல குணம் இருந்தும் நற்செயல் இருந்தும் நங்கை இவளை காண நற்சிந்தனை உடைய நாணயமானவன் எவன் வருவான்
பணமும் தொழிலும் இருந்தால் திருமணச் சந்தையில் விலை போகலாம் இவை இல்லை என்றால் விலை போகும் மந்தைகளை வேடிக்கை மட்டும் தான் பார்க்கலாம்
விலை போகவில்லையே என்று வருந்தாதே விலை மதிப்பில்லா உன்னை விணயம் பிடித்தவர்களிடம் ஒப்படைப்பதை விட வீட்டிலேயே நிம்மதியாக இருக்க விடலாம்
விழியிசை




Comments