பத்து
- RithuPedia
- Nov 2, 2025
- 1 min read
ஒற்றை நிலவாய் தோன்றி அன்பில் திளைத்து ஜொலித்த பெண்ணிவள்..
ஈரெட்டு வயதில் வால்முளைத்த பட்டாம்பூச்சியாய் திரிந்தவள்..
மூன்று முடிச்சிட்டு சிறகொடித்து கூண்டுபறவை ஆக்கப்பட்டுவள்..
நான்கு சுவர்களுக்குள் அரக்கனின் காமப்பசிக்கு இரையானவள்...
ஐந்துதிங்கள் சிசுவுடன் வாழவெட்டி என்ற பட்டம் பெற்று பிறந்தகம் வந்தவள்..
ஆறு ஆண்டுகள் மறைந்து வாழும் அக்ஞானவாசம் புரிபவள்...
ஏழு வண்ண வானவில்லை தன்வாழ்வில் கருமை என்ற ஒற்றை வண்ணமாய் ஏற்றவள்...
எட்டுதிக்கும் அயராது தன் தொலைந்த சிரிப்பை தேடுபவள்...
நவக்கோள்கள் தன்னிலை மாற்றும் எண்ணாமல் துணிந்து கடிதுழைப்பவள்...
பத்துதிங்கள் சுமந்து உயிர்வலிக்கொண்டு படைத்த
மகனதிகாரத்தை மேதினியாய் நினைப்பவள்..






Comments