நான்
- RithuPedia
- Oct 26, 2025
- 1 min read
ஆணவத்துடன் நடமாட நான் அகந்தை காரியும் இல்லை சொல்லுவதற்கெல்லாம் தலையாட்ட நான் அடிமையும் இல்லை
நலவை எடுத்துகாட்டுவதால் நான் தலைவியும் இல்லை
பிடித்ததை செய்வதால் நான் பிடிவாதக்காரியும் இல்லை
பிடிக்காததை விலக்குவதால் நான் ரசணையில்லாதவளும் இல்லை
அமைதி காப்பதால் நான் பொறுமையின் சிகரமும் இல்லை. பொங்கியெழுவதால் நான் எரிமலை சிகரமும் இல்லை
ஆச்சரியமாய் எனை நோக்க நான் அற்புதமும் இல்லை
மொத்தத்தில் நான்
என்னை பிடித்தவர்களுக்கு பிரியமானவள்
என்னை பிடிக்காதவர்களுக்கு புரியாதவள்






Comments