ரசித்தேன்
- RithuPedia
- Feb 8
- 1 min read

பாதையோரமாய் பாடிக்கிடக்கும் வாழ்க்கையில் பாதையைத்தொலைத்த பகலை இரவில் தேடும் மனிதர்களின் மத்தியில் பிச்சைக்காரர்களின் பசியில் கையேந்தும் பணிவில் இரசனையைக்கண்டேன்!
நீல வானம் கடலை அணைக்க சிவந்த பெண்ணைப்போல வானம் யாவும் சிவப்பில் ஆழ சிவந்த வானில் நிலவும் தத்தளிக்கிறது!
சிலிர்க்கும் இவ்வேளையில் சிலையானவளை சிந்தித்து தனியே சிரிக்கும் காதல் சித்தம் பிடித்தவனை சத்தமின்றி ரசித்தேன்!
முடிவுற்று நிமிர்ந்து நிற்கும் மலையில் முதலும் முடிவுமின்றியே மறந்து நிற்கும் முளைத்துவிட்ட காதல் எனும் மரம் முளைவிட்டு மட்டும் சென்றதை மறந்துவிட்ட வாழ்க்கையில் மறக்கமுடியாமல் தவிக்கும் தவறவிடப்போபவனை தலைகுனிந்து ரசித்தேன்!
பானைநிறைய பால்பொங்குவதைப்போல் பாறைமுனையில் நீர்நுரைத்து பாலைப்போல் நீர்வழிந்தோடி பாதையில் ஒடுங்கி நதியாய் மறுபிறவியாகிறது! பானையில் பொங்கிய பாலைப்போல் பெண்ணினம் பொங்கி துறையோடி துவழ்வதையும் ரசித்தேன்!
விரிந்த பச்சைவெளியில் வர்ணத்தால் வரைந்துவிட்ட வண்ணமயமாய் சிரிக்கும் வாடிவிடுவோமென்ற வலியேயின்றி வாழும் நிமிடம் வரமேயென சிறக்கும் சீர்மையான பூவைப்பார்த்தேன் இன்றையில் நாளையைத்தேடும் மனிதர்களில் மத்தியில்!
அதையும் ரசித்தேன்!
Comments