பரவாயில்லை விட்டுவிடுங்கள்
- RithuPedia
- Mar 29, 2025
- 1 min read

ஒரு தம்பதி 50 வயதில் குழந்தை பெற்றுக் கொள்கின்றார்களா!
பரவாயில்லை விட்டுவிடுங்கள்
ஒரு பெண் பல காலம் சென்று திருமணம் முடிக்கவில்லையா!
பரவாயில்லை விட்டுவிடுங்கள்
அவர்கள் திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் கடந்தும் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லையா
பரவாயில்லை விட்டுவிடுங்கள்
அவன் 30 வயது கடந்தும் ஒழுங்கான தொழில் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கின்றானா!
பரவாயில்லை விட்டுவிடுங்கள்
அவள் பேரப்பிள்ளைகளை கண்ட பிறகும் தன் கணவனோடு கைகோர்த்து விதியில் நடக்கின்றாளா!
பரவாயில்லை விட்டுவிடுங்கள்
அவள் கல்விக்காக வெகு தொலைவு சென்று தனியே தங்கியிருந்து படிக்கின்றாளா!
பரவாயில்லை விட்டுவிடுங்கள்
அவரவர் அவர்கள் விரும்பியவாறு வாழ்ந்து கொள்ளட்டும் – அவர்களுக்கு வெளியே சொல்ல முடியாத, உங்களால் கற்பனை பண்ண முடியாத அளவு சோகங்களும் துயரங்களும் இருக்கும்
அவர்களைக் கண்டால் சிறு புன்னகையுடன் கொஞ்சம் உரையாடுங்கள். ஒரு கப் தேனீர் அருந்தியவாறு சிரித்துக்கொண்டே உரையாடுங்கள்.
அதுவும் முடியாவிட்டால் மௌனமாக கடந்து விடுங்கள் அது போதும்.
உங்களது வாழ்க்கை உங்களுக்கானது அவரது வாழ்க்கை அவர்களுக்கானது.
புறம் பேசி புறம் பேசி புறம் பேசி அலைவதை விட மனம் ஒரு படி உயர்ந்தது தானே.
நன்றி இணையம்




Comments