top of page

பணத்துக்கு எவ்வளவு பெயர்கள்…


ree

கோயில் உண்டியலில் செலுத்தினால் காணிக்கை என்றும்

யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை என்றும்    

அர்ச்சகருக்குக் கொடுத்தால் தட்சணை என்றும்      

கல்விக் கூடங்களில் கட்டணம் என்றும்  

திருமணத்தில் வரதட்சணை என்றும்              

திருமண விலக்கில் ஜீவனாம்சம் என்றும்            

விபத்துகளில் இறந்தால் நஷ்டஈடு என்றும்            

ஏழைகள் கேட்டுக் கொடுத்தால் தர்மம் என்றும்          

நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் தானம் என்றும்   

திருமண வீடுகளில் பரிசாக மொய் என்றும்           

திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது கடன் என்றும்                  

திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது அன்பளிப்பு என்றும்                  

விரும்பிக் கொடுத்தால் நன்கொடை என்றும்         

நீதிமன்றத்தில் செலுத்தினால் அபராதம் என்றும்         

அரசுக்குச் செலுத்தினால் வரி என்றும்               

அரசுப் பொது தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது நிதி என்றும்

செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது சம்பளம் என்றும்

தினமும் கிடைப்பது கூலி என்றும்                  

பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது ஓய்வூதியம் என்றும்    

சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும் லஞ்சம் என்றும்                  

கடன் வாங்கினால் அத்தொகைக்கு அசல் என்றும்       

வாங்கியக் கடனுக்குக் கொடுக்கும் போது வட்டி என்றும்     

தொழில் தொடங்கும் போது போடும் அதற்கு முதலீடு என்றும்

தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு இலாபம் என்றும்    

குருவிற்குக் கொடுக்கும் போது குருதட்சணை என்றும்     

ஹோட்டலில் நல்குவது டிப்ஸ் என்றும்   

       

இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் பணத்திற்கு மாற்றாக வேறொன்றும் இப்புவியில் இல்லை    

இந்தப் பணம் என்ற காகிதத்தைப் பெற       

சிலர் அன்பை இழக்கின்றனர்    

சிலர் பண்பை இழக்கின்றனர்      

சிலர் நட்புகளை இழக்கின்றனர்     

சிலர் உறவுகளை இழக்கின்றனர்    

சிலர் கற்பை இழக்கின்றனர்       

சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்   

சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்    

சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்  

சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்    

சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்


Comments


Tags

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page