பெண் மனதளவில் வலிமையானவள்
- RithuPedia
- Sep 21, 2025
- 1 min read
உயிராக நேசித்த ஆணாக இருந்தாலும், தன்னோடு இருக்க விருப்பம் இல்லாமல் விலகி செல்லும் போது, சிறு புன்னகையோடு அவனை வழியனுப்பி வைக்கும்...
*#பெண் மனதளவில் வலிமையானவள்* ...
நேசத்தை கொட்டி கொடுத்த இடத்தில் ஏமாந்து விட்டோம் என்று தெள்ளத்தெளிவாக தெரிந்த பின்பும்,
எந்த ஒரு பிரச்சனையும் செய்யாமல் அந்த இடத்தில் இருந்து விலகி செல்லும்...
*#பெண் மனதளவில் வலிமையானவள்* ...
உடைந்தாலும் தன்னை தானே ஒட்ட வைத்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் மீண்டும் ஒரு நேசத்திற்குள் நுழையும்...
*#பெண் மனதளவில் வலிமையானவள்* ...
இரவு முழுவதும் அழுது விட்டு காலையில் ஒன்றும் நடக்காதது போல புன்னகையோடு அடுத்த வேலைகளை கவனிக்கும்...
*#பெண் மனதளவில் வலிமையானவள்* ...
நொருங்கிய இதயத்தை மீண்டும் ஒட்ட வைத்து அதற்கு உயிர் கொடுத்து மீண்டும் அதே பொலிவுடன் வரும்...
# *பெண்* *மனதளவில் வலிமையானவள்...*






Comments