top of page

பெண்களின் காதல் அழகுதான்…..

ree

விரட்டி விரட்டி காதலிக்கும் போது ஒரு வார்த்தை பேசமாட்டாளா என்று ஏங்கிய நம்மை பேசி பேசியே கொள்ளும் போது பெண்களின் காதல் அழகோ அழகுதான்…

தங்கம் ,மா ,செல்லம் ,அம்முகுட்டி, என்று நாம் கொஞ்சும் போது அவள் மௌனமாக சிரிக்கும் போதும் பெண்களின் காதல் அழகுதான்….

காய்ச்சல் என்று சிறிய பொய் சொன்னாலும் கூட உடனே நம்பி கண்ணீர் சிந்தி நம்மை காதல் மழையில் நனைய வைக்கும்போதும் பெண்களின் காதல் அழகுதான்….

ஆயிரம் முத்தங்கள் அலைபேசியில் கொடுத்துவிட்டு நேரில் ஒரு முத்தத்திற்கு நம்மை தவிக்கவிடும்போதும் பெண்களின் காதல் அழகுதான்….

யாரேனும் நம்மை தவறாக பேசும் போது அங்கே பேசாமல் இருந்துவிட்டு வீட்டிற்க்கு வந்ததும் நம்மை திட்டி தீர்க்கும் போது பெண்களின் காதல் அழகுதான்…..

யார்கூடவும் பகிர்ந்து கொள்ளமுடியாத விசயங்களை நம்மோடு பகிர்ந்து வெட்கப்படும் போது பெண்களின் காதல் அழகுதான்….

நாம் முதல் முறை காதலை சொல்லும் போது முறைத்து பார்த்துவிட்டு பின்னர் நம்மை காதல் கண்கள் கொண்டு தாக்கும் போது பெண்களின் காதல் அழகுதான்…

நம்மோடு வெளியே வரும் போது நம்மை யாரோ பார்த்து விடுவார்களோ என்று நம்மையும் சேர்த்து பயமுறுத்தும் போது பெண்களின் காதல் அழகுதான்….

வெண்ணிலா ஐஸ் கிரீம் டைரி மில்க் சாக்லேட் மாசா கூல்ட்ரிங்க்ஸ் இதுவே அதிகம் பிடிக்குமென நம் செலவை சிக்கனம் செய்யும் போது பெண்களின் காதல் அழகுதான்….

எதுவும் வேணுமா என்று கேட்டாலும் நீ கேட்டதே சந்தோஷமா இருக்கு என்று நம்மளையே அசத்தவைக்கும் போது பெண்களில் காதல் அழகுதான் …..

நம்மோடு பகிர்ந்து கொள்ள முடியாத ஆசைகளை படுக்கை அறையில் தனியாக தலையனையோடு பகிர்ந்து கொள்ளும் போது பெண்களின் காதல் அழகுதான்….

ஆயிரம் உறவுகளை காதலுக்காய் தூக்கி எரியும் போதும் உறவுக்காய் காதலை தூக்கி எரியும் போதும் பெண்களின் காதல் அழகுதான் ……

இரண்டில் எது நடந்தாலும் அதிகம் பாதிக்க படுவது பெண்கள்தான்….

ஆண்களின் காதல் பரிமாறப்படும் பிறரிடத்தில். காதல் தோல்வியை காட்டிகொடுக்கும் தாடியும் பீடியும். பெண்களின் காதலும் காதல் தோல்வியும் யாருக்குமே தெரியாது அவர்களுக்கு மட்டுமே அனுபவிக்கும் வலி வாழ்க்கை முழுவதும்….

சுதந்திரமான இந்த உலகில் சுதந்திரமற்ற பறவைகள் பெண்கள் தான் ..

நம் கைகோர்த்து நடக்க நம் மடிசாய்ந்து உறங்க நம் தோல் சாய்ந்து அமர நம் நெஞ்சினில் சாய்ந்துகொள்ள நம்மோடு மனம் திறந்து பேச நம் நெஞ்சினில் இருக்கும் முடியை இழுத்து விளையாட இப்படி கணக்கில்லா ஆசைகள் இருந்தும் நாம் அருகில் இருக்கும் போது யாதும் அறியாதவளாய் அடக்கமாய் அமர்ந்து நம்மை இம்சிக்கும் போது பெண்களின் காதல் அழகோ அழகுதான்….

இந்த காதல் வானில் சிறகொடிந்த பறவைகளே அதிகம். அதிலும் ஆண் பறவைகளை விட பெண் பறவைகளே அதிகம்.

மனதார விரும்பி மனதை கொடுத்தது ஒருவனோடு மனமில்லாமல் போவது ஒருவனோடு. காதலன் ஒருவன் கணவன் ஒருவன் நரக வாழ்க்கை..

பெண்களின் காதலை ஒருபோதும் ஒப்பிடமுடியாது ஆண்களின் காதலோடு….. என்றுமே ஆண்களின் காதலை விட பெண்களின் காதலில்தான் அழகும் வலியும் அதிகம்..

எதிர் காலத்தில் உங்களுக்கு மனைவியாக வருபவர் கூட யாரோ ஒருவரால் காதலிக்க பட்டிருக்கலாம் அதனால் அவர்களையும் உங்கள் காதலி போல நினைச்சு நேசிக்கலாமே!

ஏன் என்றால் நீங்களும் ஒருவரை காதலித்து இருக்கலாம் அதன் வலி உங்களுக்கும் தெரியும் என்பதால்…..


Comments


Tags

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page