நான் விரும்புகிறேன்....
- RithuPedia
- Sep 28, 2025
- 1 min read
உன்னில் நான் உணராத காதலை விட....
என்னில் நீ உணர்த்திய நட்பையே
நான் விரும்புகிறேன்.....
விட்டு கொடுத்து வாழும் காதலனாய் நீ இருப்பதை விட...
என்னை விட்டு கொடுக்காமல் இருக்கும் நண்பனாய் நீ இருக்கவே
நான் விரும்புகிறேன்....
தாலி அணிந்து காலம் முழுவதும் என் பாதுகாவலனாக நீ இருப்பதை விட....
தோள் கொடுத்து காலம் முழுவதும் என் நண்பனாய் நீ இருக்கவே
நான் விரும்புகிறேன்....
உயிரோடு மட்டும் அல்ல.. என் உடலோடும் கலந்திட வா...
என்று என் தோழன் நீ அழைத்தால்...
என் கூடலிலே உன் சந்தோஷம் நிறைந்திருக்குமானால்....
தயங்காமல் செய்வேனடா...






Comments