நான் ஒரு பிழைதான்...
- RithuPedia
- May 31
- 1 min read

சிரித்து பேசி மயக்க தெரியவில்லை...
அழுது பேசி சாதிக்க முடியவில்லை...
பொய்களை சொல்லி நான் ஏமாற்றியதும் இல்லை...
உண்மையை சொல்ல நான் தயங்கியதும் இல்லை...
கோபத்தால் மட்டுமே என் உணர்வை காண்பிக்க
அதை புரிந்துகொள்ள தவறியவர்களுக்கு என்றும் நான் ஒரு பிழைதான்...
Comments