தொலைத்துவிடுகிறோம்
- RithuPedia
- May 3
- 1 min read

நட்சத்திரங்கள் நிரம்பி வழியும் வானத்தில்
தேடி ரசிக்கிறோம் ஒற்றை நிலவை
பூக்கள் நிரம்பி வழியும் பூந்தோட்டத்தில் திரும்ப திரும்ப பார்க்கிறோம் வண்ணத்துப்பூச்சியை
ஆயிரமாயிரம் அதிசயங்கள் நிகழும் பூமியில் குழந்தையின் புன்னகையில் வியந்து நிற்கிறோம்
தேசம் பல கடந்து நாடு திரும்பும் நமக்காய் காத்திருக்கும் எத்தனையோ உறவுகளுக்கிடையே அன்னையைத் தேடிக்கொண்டிருக்கிறோம்
எத்தனையோ மரணம் நிகழும் உலகத்தில் நேசித்தவர்களின் மரணத்திற்காய் நித்தமும் வாடிக்கொண்டிருக்கிறோம்
எத்தனையோ இன்பங்களும் துன்பங்களும் மாறி மாறி வரும் உலகத்தில் ஏதோ ஒன்று நம்மை வாழவைத்துக்கொண்டிருக்கிறது.
அந்த ஏதோ ஒன்றை தேர்ந்தெடுப்பதற்குள் தொலைத்துவிடுகிறோம் ஏராளமான ஒன்றை!
Comments