top of page

சிலந்தி வலையில் சிக்கிய பட்டாம்பூச்சி - Killer Priya


ree

ஏனோ மனித மனம்

சிலந்தி வலையில் சிக்கிய வண்ணத்துப்பூச்சியை

ஐயோ!! பாவம் என காப்பாற்றி விடுவிக்கிறது.!


நாம் ரசிக்கும் அழகான வண்ணத்துப்பூச்சி

என்னமோ உயிர் பிழைத்து கொள்கிறது.!


ஆனால் சிலந்தி வலை ?

அறுந்துப் போகிறது.!

கூடவே சிலந்திக்கு பசியும் நீண்டு போகிறது.!


பாவம் 8-கால் பூச்சி என்ன செய்யும்?

மீண்டும் வலை பின்னி காத்திருக்கும்.!

நம்மால் வலை பின்னி தர இயலாதே.!


வண்ணத்துப்பூச்சி மேல் இருக்கும் கருணை

கொஞ்சம் சிலந்தி மீதும் இருந்திருக்கலாம்.!

@Killer_Priya

Comments


Tags

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page