கார்த்திக் நேத்தாவின் ஒரு கவிதை
- RithuPedia
- Mar 29, 2025
- 1 min read

ஆறறிவென்றே அலட்டாமல்
எளிதாய் நானும் ஓர் உயிர் என்றே இருப்பேனே
குழம்பாமல் யார் உடைத்தாலும்
சிரிக்கின்ற பொம்மைப்போலே
நான் என் இயல்பில் இருப்பேன்
ஓடும்நதியின் மேலே
உட்காரும் தட்டான் போலே
லேசாக அமர்ந்தே பறப்பேனே புவிமேலே
தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்
தான் தூங்கும் மழலைப்போலே
பேரன்பைப் போலி செய்வேனே நிறுத்தாமல்..
கார்த்திக் நேத்தா




Comments