என்னை நீ சந்திக்க நேர்ந்தால் - உமர் பின்
- RithuPedia
- May 3
- 1 min read

இனியொரு முறை
என்னை நீ சந்திக்க நேர்ந்தால்
ஒரு போதும் என்னிடம் கேட்டுவிடாதே
"எப்படி இருக்கின்றாய்?" என்று..
ஆம், இல்லை என்பதற்குள்
முந்திக் கொண்டு நிற்கிறது
இரு விழிகளில் பெருங்கடலொன்று…
அது காயம் அல்ல,
மரணத்திலும் ஒரு வகை வதை..
வந்த வழி போகவும் மனமில்லை,
கொண்ட வலி ஆறவும் திறனில்லை..
சாட்சிகள் இல்லை, என்னை நான் காட்சிப்படுத்த..
மனசாட்சியிருந்தால் திரும்பிவரட்டும்..
அதுவரை ஒரு போதும் கேட்டுவிடாதே
என்னை "எப்படியிருக்கின்றாய்" என்று…
இதழுக்கும், இதயத்திற்குமிடையில்
சண்டையிட இயலுமாயில்லை எனக்கு..
Umar bin
Comments