உன்னைத் தேட மறந்தது ஏன்..?
- RithuPedia
- Apr 19, 2025
- 1 min read
Updated: Apr 19, 2025

அமைதியைத் தேடினாய்
ஆடம்பரத்தைத் தேடினாய்
ஆனந்தத்தைத் தேடினாய்
ஆஸ்தியைத் தேடினாய்
கல்வியைத் தேடினாய்
கலவியைத் தேடினாய்
பணத்தைத் தேடினாய்
பதவியைத் தேடினாய்
பாசத்தைத் தேடினாய்
புகழைத் தேடினாய்
பெண்ணைத் தேடினாய்
பொருளைத் தேடினாய்
பொன்னைத் தேடினாய்
மண்ணைத் தேடினாய்
விடியலைத் தேடினாய்
வேடிக்கையைத் தேடினாய்
வேலையைத் தேடினாய்
மனிதா!
உன்னைத் தேட மறந்தது ஏன்?
உன்னைத் தேடிப் பார் அதுதான் வாழ்க்கை!




Comments