top of page

இழக்க வேண்டும் - திக்ருல்லாஹ் மஸ்ஸலை.



வயதை இழந்து குழந்தை ஆக வேண்டும் வாலிபம் இழந்து பள்ளியறை செல்ல வேண்டும் மொழிகள் இழந்து மௌனம் பேச வேண்டும் பிரிவை இழந்து உறவுகள் சேர வேண்டும் நேரம் இழந்து நன்மை செய்ய வேண்டும். பேனா இழந்து சித்திரம் தீட்ட வேண்டும். முகப்புத்தகம் இழந்து முதல் புத்தகம் படிக்க வேண்டும். தீமை இழந்து புதிதாய் தொடங்க வேண்டும். சோம்பல்  இழந்து  காலைக்கூட்டம் மீண்டும் வேண்டும். கட்டிடங்கள் இழந்து மைதானங்கள் வேண்டும். பொறுமை இழந்து கோபம் முறிக்க வேண்டும். வெறுமை இழந்து வெளியில் நடக்க வேண்டும். இழப்புகள் இழந்து இலக்குகள் அடைய வேண்டும். எழுத்து - திக்ருல்லாஹ் மஸ்ஸலை.


Comments


Tags

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page