இது தான் கல்யாண வாழ்க்கையா?
- RithuPedia
- Feb 1
- 1 min read

என் அன்பு சகோதரியே…
உன்னை என் சிறுபிராயத்தில் இருந்து அறிவேன். உன் நடவடிக்கைகள் அனைத்தும் எனக்கு அத்துபடி.
ஆனால் இன்று உன் நடவடிக்கைகள் அனைத்தும் எனக்கே விசித்திரமானதாக இருக்கிறதே என் சகோதரியே.
உன் கலகல சிரிப்பு சத்தம் எங்கே? வாய் ஓயாமல் பேசிக் கொண்டு இருக்கும் நீ இன்று இரண்டே வார்த்தையில் பேசி விடுகிறாய்.
நான் உன்னை பார்த்து ஆச்சரியப் படுகிறேன். அன்று உனக்கு பிடித்ததை அடைய பிடிவாதம் பிடித்தாய். ஏன் கோபம் கூட கொள்வாய்.
இன்றோ கோவத்தையும் பிடிவாதத்தையும் குழிதோண்டி புதைத்து விட்டாய் போல.
உன் மாற்றங்கள் எதற்கு என அறிவேன். ஆனால் என் ஓரே கேள்வி… இது தான் கல்யாண வாழ்க்கையா?




Comments