அவளது வாழ்வை அவர்களே வாழ்ந்திட - சஸ்னா லாபிர்
- RithuPedia
- Apr 12, 2025
- 1 min read

அவள் எல்லைகள் யார் யாரோவால் வகுக்கப்படுகிறது. அவள் எண்ணங்கள் யார் யாரோவால் விமர்சிக்கப்படுகிறது. அவள் கனவுகள் யார் யாரோவால் கலைக்கப்படுகிறது. அவள் அடையாளம் யார் யாரோவால் தொலைக்கப்படுகிறது. அவள் மௌனம் யார் யாரோவால் பேசப்படுகிறது. கூடவே அவள் வாழ்க்கை யார் யாரோவால் வாழ்ந்தும் தீர்க்கப்படுகிறது.
ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை ஆம் அவள் ஒரு பெண்ணாய் இருக்கிறாள்.. அதுவொன்றே போதுமானதல்லவா..
அவளுக்கென்ன “ராணி போல் வாழ்க்கை” என்று அவளது வாழ்வை அவர்களே வாழ்ந்திட..
-சஸ்னா லாபிர்-




Comments