அவளுக்கும் கொஞ்சம் திமிரு தான் - சஸ்னா பர்வின்
- RithuPedia
- Apr 5
- 1 min read

இளகிய மனம் படைத்த அவளே இடிந்து போகும் படி
இன்னல் தந்து ஏசினால் இதயத்தின் வலிகள் இரட்டித்து இமய மலை அளவு
இறுமாப்பு திமிரு தான் அவளுக்கும்...
நேற்று நண்பனாக இருந்தவன் இன்று துரோகியாக மாறினால் அவளுக்குள்ளும் ஒரு வகை திமிரு தான்...
அவள் ஆசைகள் எல்லாம் கானல் நீர் போல் நிராசை ஆகிவிடும் நொடிகளில் உள்ளுக்குள்ளும் ஒரு வகை விரோதம் அதுவும் தனி வகை திமிரு தான்...
அவள் தற்பாதுகாப்புக்காக அடுத்தவர் முன் நடந்து கொள்ளும் அஹிம்சைப் போராட்டமும் ஒரு வகைத் திமிரு தான்...
அவளைத் தாழ்த்தி பேசுவோருக்கு பதிலடி வீழ்த்திப் பேசுகிறாள் அதுவும் ஒரு ஆரவார திமிரு தான்...
அவளின் பணிவை புரிந்து கொள்ளாமல் அடிமை எனும் சொற்பிரயோகம் அடிக்கடி ஊசலாடும் போது தனி வகை திமிரு தான் அவளுக்குள்ளும்...
அவளை நோக்கி தினம் தினம் "நீ என்ன ஆயிஷாவா?" என்ற கேள்வி வரும் போது, கர்வமாக இலையுதிர்ந்த பதில் கொடுத்தாலும் அங்கும் ஒரு திமிரு தான்...
திமிரு தான் திமிரு தான் என்று ஏசுபவர்களே அந்த திமிரில் தான் அவள் பெண்ணாக பெண்மையுடன் இருக்கிறாள் என்பது மறந்து விட்டதா?
பெண்ணுக்கு திமிரு மட்டும் இல்லையென்றால் உலகத்திலே விலை போகும் அற்ப பொருள் ஆகிவிடுவாள் அவளும்!
திமிரில் தான் அவள் திடசங்கையுடன் இருக்கின்றாள்...
சஸ்னா பர்வின்
Comments