அளவுக்கு மிஞ்சினால்
- RithuPedia
- Apr 19
- 1 min read

வீசும் காற்று
விசிறி பிடித்தால் தென்றல்
வெறி பிடித்தால் புயல்...
பொழியும் வானம்
பூமியில் சேமித்தால் மழை
பூமியைச் சேதப்படுத்தினால் வெள்ளம்...
பற்றும் தீ
சுடர் விட்டால் தீபம்
சுட்டெரித்தால் நெருப்பு...
கலைந்திடும் அமைதி
பிரவாகமானால் ஊற்று
பிரளயமானால் பூகம்பம்...
உள்ளத்து உணர்வில்
அன்பு நினைத்தால் உறவு
கோபம் மிகுந்தால் பகை...
வெளிப்படும் குணம்
தாக்குதல் மிகுந்தால் மிருகம்
காத்தல் மிகுந்தால் தெய்வம்...
Comments