மௌனம்
- RithuPedia
- Feb 15
- 1 min read
Updated: Apr 19

புறக்கணிப்பின் மொழி மறதியின் மொழி அறியாமையின் மொழி திமிரின் மொழி ஆனால் மௌனம் ஊமை அல்ல
உணர்ச்சிகளின் மொழி பெயர்ப்பு,
ஓசைகளின் நிசப்தம் மௌனம்.
கடந்து போகும் கவலைகளின் அழுகைகளின் சேமிப்பு மௌனம்.
சந்தோசப் பொழுதுகளில் புன்னகையின் சேமிப்பு மௌனம்.
கோபங்களின் பாதைகளில் புயல்காற்றின் சேமிப்பு மௌனம்.
வெற்றிகளின் பதிவுகளில் பெருமிதங்களின் சேமிப்பு மௌனம்.
தோல்விகளின் துவளல்களில் வைராக்கியத்தின் சேமிப்பு மௌனம்.
இசைகளின் லயிப்புக்களில் ஆழ்கடல் மன அமைதி மௌனம்.
இழந்த அடையாளங்களின் தேடப்படாத அசண்டையீனம் மௌனம்.
பக்குவம் கண்ட முதிர்ச்சியின் கடைசி நிலை மௌனம்.
コメント