தாய்
- RithuPedia
- Feb 22
- 1 min read

“தாய்” பிறக்கும் போது அழு ‘தாய்’ பிறந்தவுடன் சிரித் ‘தாய்’ உயிர் கொடுத்’தாய்’ பால் கொடுத்’தாய்’ பக்குவமாய் வளர்த்’தாய்’ குழிக்க வார்த்’தாய்’ பட்டிணி இருந்’தாய்’ என் பசி தீர்த்’தாய்’ உறக்கம் இழந்’தாய்’ கல்வி கொடுத்’தாய்’ உறவுகளை இணைத்’தாய்’ இதயம் மலர்வித்’தாய்’ வாழ்வில் மகிழ வைத்’தாய்’ துயர் துடைத்’தாய்’ உயிர் காத்’தாய்’ நற்பண்பை வளர்த்’தாய்’ ஈகையை கற்பித்’தாய்’ நோய் வந்திருந்’தாய்’ மனம் உருக வைத்’தாய்’ உயிர் பிரிந்’தாய்’ தினமும் நினைக்க வைத்’தாய்’ என் அன்புத்’தாய்’
Comments