top of page

நம் வீட்டு கண்ணாடி

சிறு கதை..


இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்கு குடி போனார்கள்..


அதிகாலை தேநீர் குடித்த படி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்..


பக்கத்து வீட்டு பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்தி கொண்டிருந்தாள்..


பார்த்து கொண்டே இருந்த மனைவி சொன்னாள் :`"அந்தம்மாவுக்கு துவைக்கவே தெரியல போல. துணியில அழுக்கே போகல பாருங்க."`


கணவனும் பார்த்தான்..

ஆனால் , பதில் எதுவும் சொல்லவில்லை..


தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும் , பக்கத்து வீட்டு பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லி கொண்டே இருந்தாள்..


திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டு பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதை பார்த்த மனைவி சொன்னாள் :`"அப்பாடா.. இப்போது அந்தம்மா துவைக்க கற்று கொண்டாளா? இல்லை னா நல்ல சோப்பை பயன்படுத்த தொடங்கிட்டாளா னு தெரியல. இன்னைக்கு தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கு."`


கணவன் அமைதியாக சொன்னான் :

`"இன்னைக்கு அதிகாலையில தான் நான் நம்ம வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை சுத்தம் செஞ்சேன்."`


இப்படித்தான் நாட்டில் நடக்கின்றது..


*நம் வீட்டு கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டு துணிகள் அழுக்கு படிந்தே காட்சி அளிக்கின்றன..*


ஆனால் , *நாம் நம் வீட்டு கண்ணாடியை சந்தேகிப்பதே

இல்லை ..*


*ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன‌‌..*


*அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை.‌.*🙂🖤

Comments


Tags

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page