குட்டி தேவதை - மிஸ்னா
- RithuPedia
- Apr 5
- 1 min read

ஒரு முறை 5 வயது பெண் குழந்தை தான் அப்பாவின் மூக்கு கண்ணாடியை உடைத்து விட்டது. அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார். அன்று இரவு முழுவதும் அந்த குழந்தை அப்பாவுக்கு ஒரு பரிசு தயார் செய்து அடுத்த நாள் தன் தந்தையிடம் கொடுத்தது. அதை பிரித்து பார்த்து அதில் ஒன்றும் இல்லாததை பார்த்து கோபமுற்றர். யாருக்காவாது பரிசு கொடுக்கணும்னா எதவாது பொருள் வைத்து கொடுக்கணும்டு கண்டித்தார். அந்த குழந்தை சிரித்து கொண்டே ஆர்வத்துடன் சொன்னது. நான் இரவு முழுவாதும் 1000 முத்தங்களை இந்த பொட்டிகுள்ளே கொடுத்து. முடி தான் உங்களிடம் தந்தேன் என்று. அதை கேட்ட அந்த தந்தை அந்த குழந்தையை இறுக்கி கட்டி அணைத்து மன்னித்து கொள்ளம்மா உன் அன்பு புரியாமல் திட்டி விட்டேன் என்றார். அவர் தான் தலையணை அடியில் அந்த பொட்டியை வைத்து கொண்டார். எப்பொழுது எல்லாம் மனம் வருத்தம் அடைக்கிறதோ அப்பொழுது எல்லாம் தான் அன்பு மகளின் முத்ததை அந்த பொட்டியை திறந்து எடுத்து கொண்டார். பெண் குழந்தைகள் வாழும் வீடு தேவதைகள் வாழும் வீடு
mizna
Comments