top of page

ஆணின் காதல்



ஒரு இளைஞன் ஒரு அழகான அறிவான பெண்ணைத் துரத்தி துரத்தி காதலித்து வந்தான்.அவள் விலகி விலகி போய்க்கொண்டிருந்தாள்

ஒரு நாள் அந்த இளைஞன் அவளிடம் தன் காதலை தெரிவித்தான்.! அவள் முதலில் அவனுக்கு தந்தது ஒரு சவால்.! ஒரு மாதம் முழுவதும் அவளை பார்க்காமல் பேசாமல் அவன் இருக்கவேண்டும். அப்படி உன்னால் முடிந்தால் உன்னை காதலிக்கிறேன் என்று கூறினாள.

அழகான அறிவான அந்தப் பெண்ணுக்கு தான் ஒரு புற்று நோயாளி என்பது தெரியும். இந்த பூமியில் ஒரு மாதம் மட்டுமே அவளால் உயிர்வாழ முடியும் என்று வைத்தியர் நாள் குறித்துவிட்டார்.

ஒரு மாதம் முழுவதும் முடிந்தது

அவன் அவளை பார்ப்பதற்காக காதலோடும் ஒரு கடிதத்தோடும் ஒரு சிவப்பு ரோஜாவை கையில் ஏந்தி கொண்டு ஓடோடி வந்தான். ஆனால்! அவன் அங்கே கண்டது, சுவாசம் இல்லாமல் மரண படுக்கையில் கிடந்த அவள்.

அவள் அழகிய கையில் ஒரு கடிதமும் இருந்தது

கடிதத்தில் “நீ ஜெயித்துவிட்டாய். ஒரு மாதம் முழுவதும் உன்னால் என்னிடம் பேசாமலும், பார்க்காமலும் இருக்க முடியும் என நிரூபித்து விட்டாய். இனி வரும்காலங்களிலும் இதே போல் வாழ்ந்து விடு. நான் உன்னை உயிராக நேசித்தேன்” என்று குறிப்பிட்டிருந்தது

அவன் வாழ்கிறான் இன்னும் அவளுக்காக சுவற்றில் அவளுடைய புகைப்படத்திற்கு அருகில் துணையாக புகைப்படமாக.

அங்கே இரண்டு கடிதங்கள் இருக்கின்றன ஒன்று அந்தப் பெண்ணுடையது மற்றொன்று அவன் கடைசியாக ரோஜாவோடு கொண்டு வந்த அவளுக்கான கடிதம்

அதில் இரண்டு வரிகள் இப்படி எழுதப்பட்டிருந்தது

“உன்னை காதலித்த பிறகு தான் அறிந்து கொண்டேன் ஒரு மாதம் தான் நீ உயிர் வாழ்வாயென்று. அதனால்தான் என் வாழ்நாளையும் ஒரு மாதமாய் குறைத்துக் கொண்டேன். ஒரு மாதமாய் உன்னைப் பார்க்காமல் இருந்தது உன் காதலுக்கு நான் கொடுத்த உயரிய மரியாதை. உன்னுடனே உறங்க வருகிறேன் உயிரே ” என்று எழுதப்பட்டிருந்தது

ஆணின் காதல் எந்த விதத்திலும் குறைந்தது அல்ல.


Comments


Tags

Quik Links

Subscribe 

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page