வயோதிபம்
- RithuPedia
- May 10
- 1 min read

ஆண்களை விட பெண்கள் ஏன் வெகு சீக்கிரமாக உடல் வலுவிழந்து வயோதிபம் அடைகிறார்கள் தெரியுமா?
தாயின் வயிற்றில் வளரும் சிசுவானது, மிதந்த வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக அதிக பட்ச அடர்த்தியான உப்புத் திரவத்திலே இருக்கும். இதனால் சிசு தனது கனதியை இழந்துவிடுகிறது, தாயும் சுமையை உணர்வதில்லை.
ஆனால் தாயுடன் இணைக்கப்பட்ட தொப்புள் கொடி மூலம் சிசுவுக்குத் தேவையான அத்தனை உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துகள் எல்லாம் சிரமமின்றி வந்து சேரும் விதமாக அமைந்துள்ளது.
ஒரு வேளை உணவு உட்கொள்வதிலும், ஊட்டச்சத்துகள் எடுப்பதிலும் தாய் பாராமுகமாக இருந்தால் கூட சிசுவுக்கு வரவேண்டிய ஊட்டச்சத்துகளில் எதுவித தடையும் ஏற்படாது. கருவில் அமைந்துள்ள சுரப்பிகளானது தாயின் பற்கள் மற்றும் எலும்புகளைக் கரைத்து சிசுவின் உணவுக் குறைபாடுகளை ஈடுசெய்துவிடும்.
இதனால்தான் வயது போகப் போக தாய்மார்களின் பற்கள், முழங்கால்கள் மற்றும் எலும்புகள் என உடல் அவையங்கள் வலுவிழந்து விடுகின்றன. பெண்கள் அவசரமாக முதுமை அடைய இதுவே காரணமாகும்.
ஒவ்வொரு பிள்ளையும் தன் தாய் தனக்காக எலும்புகளைக் கூட கரைத்து வாழ்க்கை தந்துள்ளால் என்பதை உணர்ந்தால் அவளுக்கு எப்படி உபகாரம் செய்து முடிப்பது என்பது தெரியாமல் தடுமாற்றம் அடைந்துவிடுவான்.
Comments