top of page

வாழ்க்கை எல்லோருக்கும் நிறைவாய் இருக்காது




ஒருவரிடம் வீடு இருக்கும்!

ஆனால், நிம்மதியான தூக்கம் இருக்காது!

ஒருவருக்கு அழகான மனைவி இருப்பாள்!

ஆனால், அவளோ பெரும் சண்டைக்காரியாக இருப்பாள்!


ஒருவருக்கு வீடு நிறைய பிள்ளை இருக்கும்!

ஆனால், வருமானம் பற்றாக்குறையாக இருக்கும்!.

ஒருவருக்குப் பிள்ளை இருக்காது!

ஆனால்,வசதி வீடு நிரம்ப இருக்கும்!


ஒருவருக்குச் சாப்பிட ஆசை இருக்கும்!

ஆனால், உணவு இருக்காது!

ஒருவருக்கு விரும்பிய உணவு கிடைக்கும்!

ஆனால், சாப்பிட முடியாத அளவு நோய் இருக்கும்!


இளம் வயதில் நிறைய நேரம் உடலில் தெம்பும் இருக்கும்

ஆனால், காசு இருக்காது.

நடுத்தர வயதில் உடலில் தெம்பும் இருக்கும் காசும் இருக்கும்

ஆனால், நேரம் இருக்காது.

வயதான காலத்தில் நிறைய நேரம் இருக்கும் காசும் இருக்கும்.

ஆனால், உடலில் தெம்பு இருக்காது.


இளமையில் அழகைத்தேடி அலைபவர்கள் அறிந்து கொள்ளுங்கள்….

முதுமையில் அன்புதான் துணையாக இருக்கும்.

இப்படித்தான் உலகம்.


வாழ்க வளமுடன்…..

Comentarios


Tags

Quik Links

Subscribe 

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page