top of page

வெளிநாட்டு வாழ்க்கை



கல்யாணம் முடிந்த பிறகு விடுமுறை முடிந்து வெளிநாடு போகும் தருணம் என் கருவை சுமக்கும் மனைவியையும் சேர்த்து என் நெஞ்சில் சுமந்து கொண்டு தான் விமானம் ஏறுகின்றேன்!

உனக்கென்ன வெளிநாட்டு ராஜ வாழ்க்கை என்று ஊருக்கு போனதும் உள்ளூர் வாசிகள் எங்களை பார்த்து விடும் பெருமூச்சு அரபு நாட்டு வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது.

யாரும் இல்லாமல் கூட நிம்மதியாக வாழ்ந்து விடலாம் ஆனால் எல்லோரும் இருந்தும் அனாதையாக வாழ்வதே கொடுமை நிறைந்த வாழ்க்கை.

வாழ்க்கை எனும் பயணத்தில் வேலை தேடி வெளிநாடு செல்லும் நமக்கு நெருக்கமானவர்களின் பயணம் நம் கல் மனதையும் கரையைச் செய்கின்றது.

வெளிநாட்டு வாழ்க்கை தலையணையை சரி செய்து சுகமாய் தூங்கிய நாட்களை விட சோகம் நிறைந்த அசதியில் தூங்கிய நாட்கள் தான் அதிகம்.

உலகில் உள்ள வேதனைகளின் மொத்த உருவம் தான் இந்த வெளிநாட்டு வாழ்க்கை.

உழைக்க வேண்டிய வயது என விமானம் ஏறி வந்து வாழ வேண்டிய வயதை தொலைத்து நிற்பதே இந்த வெளிநாட்டு வாழ்க்கை.

ஓடி ஓடி உழைத்தாலும் கையும் காலும் விறைத்தாலும் அன்பாக பேச யாருமில்லை காசு என்பது நிற்கவில்லை கடன் தொல்லை தீரவில்லை சொன்னாலும் யாரும் நம்பவில்லை.

வெளிநாட்டில் சம்பாதிக்கும் குடும்பங்களே ஆடம்பரத்தை குறைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் செலவு செய்வது பணம் அல்ல சம்பாதிப்பவரின் வயதை.

வெளிநாடு என்பது ஒரு வினோதமான சிறைச்சாலை அதில் இருப்பவன் வெளியே வர துடிக்கிறான் வெளியே இருப்பவன் உள்ளே வர துடிக்கிறான்.


Comments


Tags

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page