சிந்திக்க சில துளிகள்
- RithuPedia
- Sep 21, 2025
- 2 min read
Updated: Oct 12, 2025
ஒரு நாளில் வாடிப் போகும் மலர்கள் கூட சிரிக்கின்றன. வாழ்வதற்காக பிறந்த நாம் ஏன் அழ வேண்டும்.
நீச்சல் தெரிந்த பின்னே நீரில் இறங்குவது என்பது எப்படி முடியாதோ அதே போலதான் வாழ்க்கையும்.
மற்றவர்கள் போல் நீ வாழ்ந்தால் உன்னைப் போல் யார் வாழ்வது. நீ நீயாக இரு.
பழி சொல்ல தெரிந்த யாரும் வழி சொல்லப் போவதில்லை.
உன் மரணத்தின் பின் உன்னை எவ்வளவு விரைவாக மக்கள் மறக்கிறார்கள் என்பதை நீ அறிந்தால், இறைவனை தவிர வேறு யாரின் திருப்திக்காகவும் நீ வாழமாட்டாய்.
தனியாகப் போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா என்று வருந்தாதே. நீ தனியாக போராடுவதே வெற்றிதான்.
உன் கைரேகையை பார்த்து உன் எதிர் காலத்தை நம்பி விடாதே. ஏன் என்றால் கை இல்லாதவனுக்கும் எதிர்காலம் உண்டு.
விதைகள் கீழ் நோக்கி ஏறியப்பட்டால் தான் விருட்சங்கள் மேல்நோக்கி வளரும்.
புரிந்து கொண்டால் கோபம்கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும், புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தெரியும்.
நம்முடைய குணங்களையே பிறரிடமும் தேடுகிறோம். கை ரேகை போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் என்பதை அறியாமல்.
இருக்கும் போது அலட்சியமும் இல்லாத போது தேடலும் இது தான் மனித வாழ்கை.
விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று. வாழ்கையும் அப்டிதான் முடியும் வரை தெரிவதில்லை வாழ்வது எப்படி என்று.
அழுவதற்கான காரணத்தை சொல்லத் தெரியாத வயதில் சத்தமாகவும், சொல்லத் தெரிந்த வயதில் மௌனமாக மனதிற்குள்ளும் அழுது கொள்கிறோம்.
இன்பம் எப்படி இருக்கும் என்பதை உணரும் முன்பே வலி எப்படி இருக்கும் என்பதை உணர்த்தி விடுகிறது வாழ்க்கை.
கடவுளே உனக்கு கண் இல்லையா என்கிற போது காது இருக்கிறது என்று நம்புகிறார்கள்.
உண்மையை உளறினேன் என்கிறார்கள், பொய்யை பேசினேன் என்கிறார்கள்.
அடுத்தவனுக்கு கிடைத்துவிட்டதே என்று மனிதன் பொறாமை படாத ஒரே விடயம் மரணம்.
சொந்த காலில் வாழ்ந்தாலும் பிறரையும் கொஞ்சம் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். சொந்த காலில் யாரும் சுடுகாடு செல்ல முடியாது.
இறப்பதற்கு விஷம் குடிப்பவன் பிழைத்துக் கொள்கிறான், வாழ்வதற்கு மருந்து குடிப்பவன் இறந்து போகிறான்.
உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம், உச்சிக்கு வந்தால் திட்டித்தீர்க்கும். சூரியனை மட்டுமல்ல மனிதனின் வளர்ச்சியையும் கூட.
கோலம் ஒன்று வரைந்து முடித்த பின் ஆரம்ப புள்ளியும் தெரியாது இறுதி புள்ளியும் தெரியாது.
அடுத்தவர் பிடிவாதத்தை திமிர் என்றும் தன்னுடைய பிடிவாதத்தை மன உறுதி என்றும் பிரிக்கிறான் மனிதன்.
நீ சூரியனை போல பிரகாசிக்க சூரியனை போல எரிய வேண்டும்.
புதிய உறவுகளை தேடும் முயற்சியில் சிலர் உண்மையான உறவுகளை தொலைத்துவிடுகின்றனர்.
புரியாத உறவு அருகில் இருந்தும் பயனில்லை. புரிந்து கொண்ட உறவுகளுக்கு பிரிவு தூரம் இல்லை.
வார்த்தைகளை நெய்யத் தெரிந்தவர்கள் உறவுகளை உடுத்திக் கொள்கின்றனர்.
கடல் நீர் உப்பென்று அதை முழுதாக அருந்தி பார்க்க தேவை இல்லை.
யாரும் மரணிக்க விரும்புவதில்லை, ஆனால் அனைவரும் சுவர்க்கம் செல்ல ஆசைப்படுகின்றனர்.
எல்லாவற்றுக்கும் இரண்டு கோணங்கல் உண்டு. பணக்காரன் ஆக வேண்டும் என்றால் பணத்தை குவிக்கலாம் அல்லது செலவை குறைக்கலாம். எதை தேர்ந்தெடுப்பது என்பதே முக்கியமானது.
கோபப்பட்டு வென்று விட்டாய் எனில் உன் கோபம் பெரிது என்று அர்த்தமல்ல, அதை தாங்கிக்கொண்டவர்களின் பொறுமை பெரிது என்று அர்த்தம்.
விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள். விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள். இவை தான் மனிதனின் எண்ணங்கள்.!
பிச்சையிடுவது என்பதில் பிச்சைக்காரன் பசியாறட்டும் என்ற எண்ணத்தை விட, நமக்கு புண்ணியம் கிடைக்கட்டுமே என்ற ஆசையில் போடப்படுவதே அதிகம்.






Comments