எவரெஸ்ட் - இயற்கையின் நிழல்.
- RithuPedia
- May 17, 2025
- 2 min read

இது வரை 11996 முறை எவரெஸ்ட் மலை உச்சிக்கு மனிதன் சென்று வந்து விட்டான். 6664 நபர்கள் தான் இந்த 11996 முறை எவரெஸ்ட் உச்சி தொட்டு வந்தவர்கள். மீண்டும் மீண்டும் செல்ல கூடியவர்கள் உண்டு.
முதன் முதலில் Tenzing தான் 1953 இல் நோர்வே நாட்டை சேர்ந்தவரை அழைத்து சென்று இமய மலை உச்சியை தொட்டார். அதிலிருந்து இன்று வரை 6664 நபர்கள் இமய மலை உச்சியை தொட்டு விட்டார்கள்.
அதற்கு முன் எப்படி என்று தெரியாது. 1852 இல் தான் எவரெஸ்ட் மலை உச்சியை பற்றி உலகிற்கே தெரிய வந்தது. அது வரை கஞ்செஞ்சுங்க மலையை தான் மிக உயரமான மலையாக நினைத்து வந்தார்கள்.
1953 முதல் 2023 வரை இந்த உச்சத்தை தொட எடுத்த முயற்சியில் இது வரை நிகழ்ந்த மரணம் 327. நீங்கள் இமய மலை ஏறி வர நினைத்தால், ஐம்பது லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் 2024 விலை படி.
20 பாதைகள் உண்டு எவரெஸ்ட் சிகரம் செல்ல. 3 தொடக்க பாபாதளில் ஒன்று நேபாளத்தில் தொடங்கும். மீதம் இரண்டு திபெத்தில் தொடங்கும். அதில் kangshung பாதை திபெத்தில் இருந்து போவது. இருப்பதிலேயே மிக கடினமான மற்றும் ஆபத்தான பாதை. அதிகம் யாரும் சென்றதில்லை.
நீங்கள் இமயத்தை தொட்டு வருவது ஒரு ஜாலியான பயணம் என்று நினைத்தால், அது தான் இல்லை.
அங்கே 327 நபர்கள் இறந்ததாக சொன்னேன். அவர்கள் உடல்கள் இன்னும் அங்கே தான் இருக்கிறது. குளிரின் காரணமாக இன்னும் மக்காமல் அப்படியே இருக்கிறது. நீங்கள் அந்த பிணங்களை மிதித்து செல்ல வேண்டியது கூட வரலாம்.
போய் வருபவர்களின் மனித கழிவுகளும் அப்படியே இருக்கும். ஒதுங்கி மறைவாக சென்று வர முடியும் என்று நினைக்கிறீர்களா? அரை அடி தவறினால் மரணம். அத்துணை நபர்கள் முன்னாடி அப்படியே உக்கார வேண்டியது தான்.
Death zone என்னும் பகுதியை அடைந்து விட்டால், நீங்கள் அதி விரைவு காட்ட வேண்டும். ஆக்சிஜன் இருக்காது. மூச்சு முட்டி சாகலாம்.
அதை விட ஆபத்து snow blindness. அந்த பனி கட்டிகளில் சூரிய ஒளி பட்டு UV Rays உங்களை தாக்கி உங்கள் கண் பார்வை பரி போகலாம்.
மிக அதிக வெப்பத்தில் உங்கள் தேகம் பட்டால், கருகி அழிந்து விடுவது போல, frost bite என்று ஒன்றும் உண்டு.
அதிக குளிர் மைனஸ் டிகிரி இல் உங்கள் தேகத்தில் பட்டு அந்த பகுதி அழுகி விடக்கூடும்.
இப்படி பல கொடூரமான ஆபத்துக்கள் உண்டு. காட்டாற்று வெள்ளம் எப்படி திடீரென அதிகம் ஆகி உங்களை அடித்து செல்லுமோ, அப்படி தான் எவரெஸ்ட் பகுதியில் சீதோசன நிலை. நொடி பொழுதுகளில், பனி கொட்டும். காற்று தூக்கி செல்லும் அளவு அடிக்கும். பயணத்தை தொடரலாமா திரும்பி விடலாமா என்ற எண்ணம் நொடிக்கு நொடி மாறும்.
8000 அடி உயரம் தாண்டி 8848 அடி வரை தான் இந்த death zone.
இதை கடந்து சென்று திரும்பி வர உங்களுக்கு அதிக பட்சம் 16 மணி நேரம் தான் பாதுகாப்பாக இருக்கும். சில நேரம் 8 மணி நேரம் தான். இந்த பகுதியில் ஆக்சிஜன் குறைபாடு உள்ளதால், நமது உடலில் செல்கள் சாக தொடங்கும். Stroke, மாரடைப்பு, ஏற்படலாம். முடிவு எடுக்க பாதை அறிய தடுமாற்றம் ஏற்படும்.
ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டும் தான் இந்த முயற்சிக்கு தகுந்த மாதங்கள்.
மற்ற மாதங்களில் அந்த சிகரம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது.
டிசம்பர் முதல் பிப்ரவரி வரை மிக ஆபத்துக்கள் நிறைந்த மாதங்கள். ஜனவரி, மார்ச், ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் இது வரை யாரும் உச்சியை தொட்டது இல்லை.
இந்த மாதங்களில் காற்றின் வேகம் 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். 350 கிலோ மீட்டர் வேகம் வரை வீசுவதுண்டு. கடைசியாக தமிழகத்தை புரட்டி போட்ட michaung புயலின் போது காற்று வேகம் 110 கிலோ மீட்டர் வேகம் தான். கணக்கு போட்டு கொள்ளுங்கள்.
ஏறி திரும்ப வரும்போது, எட்டு கிலோ குப்பைகளை நீங்கள் திரும்ப கொண்டு வர வேண்டும் என்பது நேபால் அரசின் ஆணை. போவோர் எல்லாம் நிறைய குப்பைகளை அங்கேயே போட்டு விட்டு தான் வருகிறார்கள். ஃபிட்னஸ் இல்லாமல் உங்களுக்கு அனுமதி இல்லை.
- இயற்கையின் நிழல்..




Comments