எது வெற்றி.?
- RithuPedia
- May 17, 2025
- 1 min read

4 வயதில், தனியாக நடக்க முடிந்தால்,
8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், 12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால்,
18 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால்,
22 வயதில், பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், 25 வயதில், நல்ல வேலை கிடைத்தால்,
30 வயதில், தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால்,
35 வயதில், போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால்,
45 வயதில், இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், 50 வயதில், தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், 55 வயதில், நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், 60 வயதில், ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால்,
65 வயதில், நோயில்லாமல் வாழ முடியுமானால்,
70 வயதில், மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால்,
75 வயதில், பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால்,
80 வயதிற்கு மேல் மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அதுவே வெற்றி




Comments