top of page

இதுதான் உலகம்



50 ரூபாவை யாரும் ஒரு ஏழைக்கு அவ்வளவு எளிதில் தானமாகக் கொடுக்க மாட்டார்கள் ஆனால் ஹோட்டலில் டிப்ஸ்ஸாக அவர்கள் 50 ரூபாவைக் கொடுப்பார்கள்.


3 நிமிடம் இறைவனை வணங்க பிடிக்காது ஆனால் 3 மணி நேர சினிமாப் படம் பார்க்கப் பிடிக்கும்.


முழு நேர வேலைக்குப் பின்னர் கூட உடற் பயிற்ச்சிக்கு செல்வார்கள் ஆனால் வீட்டில் அப்பா அம்மாவுக்கு உதவக் கேட்டால் முடியாது என்பார்கள்.


காதலர் தினத்திற்காக 1 வருடம் காத்திருந்து பரிசு வாங்குவார்கள் ஆனால் அன்னையர் தினம் மட்டும் நினைவில் இருக்காது.


ஏழைச் சிறுவனுக்கு ஒரு பாண் துண்டை கொடுக்க யாரும் இல்லை ஆனால் அந்த பையனை ஓவியமாக வரைந்த போது இந்த ஓவியம் வரையப்பட்ட முறையில் சோகம் இருக்கிறது என்பதனால் அதனை ஒருவர் 10 லட்சம் ரூபாய்களுக்கு வாங்கிச் செல்வார்.


இது தான் இன்றைய மனிதனின் நிலை.

மனிதர்களை நினைக்கும் போது நூதனமாக உள்ளது அல்லவா.



Comments


Tags

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page