செருப்புத் தைப்பவர் மகன் திரு. லிங்கன் ஐயா
- RithuPedia
- Feb 15
- 1 min read

ஆப்ரஹாம் லிங்கன் வாதாடிய வழக்கு
லிங்கன் ஆரம்ப காலத்தில் வாழ்க்கையை நடத்த மிகவும் கஷ்டப்பட்டார்; கடுமையாக உழைத்தார்.
அப்போது ஒரு கொலை வழக்கை நடத்த குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் அண்டினார்.
அவரோ நிரபராதி. இதை அறிந்த லிங்கன் அவருக்காக நீதி மன்றத்தில் ஆஜரானார்.
வழக்கு விசாரணைக்கு வந்தது.
லிங்கன் பதட்டமின்றி கொலை செய்ததை நேரில் பார்த்ததாகச் சொன்ன சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பித்தார்.
அந்த ஒருவர் தான் முக்கியமான சாட்சி. ஏனெனில் அவர் தான் கொலையை ‘நேரில் பார்த்தவர்’!
குறுக்கு விசாரணை ஆரம்பித்தது:
லிங்கன் : நீங்கள் கொலை செய்யப்பட்ட நபருடன் கொலை நடப்பதற்கு சற்று முன்பு இருந்திருக்கிறீர்கள். துப்பாக்கியால் சுடப்படுவதையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?
சாட்சி : ஆமாம்
லிங்கன் : இருவருக்கும் அருகில் இருந்திருக்கிறீர்கள்
சாட்சி : ஆமாம்
லிங்கன் : அது திறந்தவெளியில் நடந்ததா?
சாட்சி : இல்லை, மரங்களுக்கிடையில் நடந்தது
லிங்கன் : என்ன மரங்களுக்கிடையில்?
சாட்சி : பீச் மரங்களுக்கிடையில்
லிங்கன் : இலையுதிர்காலத்தில் பீச் மரங்களின் இலைகள் அடர்த்தியாக சாட்சி : அப்படித்தான் இருக்கும்
லிங்கன் : நீங்கள் கைது செய்யப்பட்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருக்கிறாரே, அவர் சுட்டதைப் பார்த்தீர்கள்?
சாட்சி : ஆமாம்
லிங்கன் : எவ்வளவு அருகில் இந்தக் கொலை நடந்தது?
சாட்சி : முக்கால் மைல் தூரத்தில்
லிங்கன் : எங்கே விளக்குகள் இருந்தன?
சாட்சி : பாதிரியாரின் மேடைக்குத் தள்ளி
லிங்கன் : அது முக்கால் மைல் தூரத்தில் அல்லவா இருக்கும்?
சாட்சி : நான் அப்படித்தானே சொன்னேன்!
லிங்கன் : குற்றம் சாட்டப்பட்டிருக்கிறாரே, அவர் நின்ற இடத்தில் வெளிச்சம் இருந்ததா?
சாட்சி : இல்லை. வெளிச்சம் எதற்கு வேண்டும்?
லிங்கன் : வெளிச்சம் தேவை இல்லையெனில் எப்படி சுடப்படுவதைப் பார்த்தீர்கள்?
சாட்சி : நிலா வெளிச்சத்தில்
லிங்கன் : ஆக, நீங்கள் இப்படி சுட்டதை இரவு பத்து மணிக்கு பீச் மரங்களுக்கிடையே விளக்கு இருந்த இடத்திலிருந்து முக்கால் மைல் தூரத்தில் பார்த்திருக்கிறீர்கள். பிஸ்டலைக் கொண்டு குறி பார்த்து சுட்டதைப் பார்த்தீர்கள். அதை நிலா வெளிச்சத்தில் பார்த்தீர்கள். சரி தானே?
சாட்சி : ஆமாம், அதைத் தான் அப்போதே சொன்னேனே!
இளம் வக்கீலான லிங்கன் மெதுவாக தனது பாக்கெட்டிலிருந்து ஒரு பஞ்சாங்கத்தை எடுத்தார். அதை நீதிபதியிடம் காண்பித்தார்.
குற்றம் நடந்த தினம் ஒரு அமாவாசை தினம் என்பதைச் சுட்டிக் காட்டினார்.
குற்றம் சாட்டப்பட்டிருந்த நிரபராதி விடுதலையானார்.
லிங்கனின் புகழ் அன்றிலிருந்து ஊரெங்கும் பரவத் தொடங்கியது.
Comentários