ராண்டியன்
- RithuPedia
- Jun 7
- 1 min read

'கம்பளிப்பூச்சி" என்று அழைக்கப்படும் ராண்டியன் என்பவர் 1871 ஆம் ஆண்டில் பிரிட்டிஷில் பிறந்தார். கைகால்கள் எதுவும் இல்லாமல் பிறந்த அவர்,சாக்ஸ் போன்ற கம்பளி உடையை அணிந்திருப்பார்.
ராண்டியன் ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்சு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளைப் படித்து சரளமாகப் பேசக்கூடியவர்.
ராண்டியன் நடிப்புத் துறையில் நுழைந்து 1932 ஆம் ஆண்டு வெளியான "Freaks" என்ற திகில் படத்தில் நடித்த பிறகு பிரபலமானார்
நடிப்பைத் தவிர, ஓவியம் வரைதல் , எழுதுதல் உள்ளிட்ட பல கலைகளிலும் ராண்டியன் சிறந்து விளங்கினார். உடல் குறைபாடுகள் அவரிடம் இருந்தபோதிலும், திருமணம் செய்து நான்கு குழந்தைகளைப் பெற்றார், பின்னர் 63 வயதில் இறந்தார்.
வாழ்வதற்கும் சாதிப்பதற்கும் உடல் ஊனம் ஒரு தடையல்ல என்பதற்கு ராண்டியனின் வாழ்க்கை வரலாறு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
Comments