top of page

40 வருடங்களுக்கு முன்



80 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை


1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்.

2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்.

3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம்.

4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.

5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன் வீட்டு சொந்தங்களே பாசத்துடன் பரிமாறினார்.

6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்.

7. பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்.

8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்.

9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.

10. பாடல்களின் வரிகள் புரிந்தன.

11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.

12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.

13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்.

14. காணும் பொங்கலுக்கு உறவுகளை பார்த்தோம்.

15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது.

16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார்.

17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம்.

18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்.

19.மானேஜராக பணி புரிந்தாலும் தந்தை சைக்கிளில் தான் பவனி வந்தார்.

20. வெள்ளி அன்று ஒலியும் ஒளியும் பார்க்க ஆவலோடு காத்து கிடந்தோம்.

21. பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கி பாடம் படித்தோம்.

22. பனம் பழம் சுட்டு உண்ண காடு காடாய் அடைந்தோம்.

23. கயித்து கட்டிலை பெரியவர்களுக்கு கொடுத்து விட்டு பாயில் படுத்து உறங்கினோம்.

24. எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது.


முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்.

"நாகரீகப் போா்வை" போா்த்தி நாசமாய் போனோம்.

அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!

இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது

இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது.

Comments


Tags

Quik Links

Subscribe 

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page