வயதானவர்கள் முட்டாள்கள் இல்லை
- RithuPedia
- May 31
- 1 min read

படித்ததில் பிடித்தது
ஒரு பெண் தன் தந்தையுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அவளைக் காண அவளது தோழன் வருகிறான்.
பெண் - 'நீ பாமுக் எழுதிய ; ”அப்பா வீட்டில் இருக்கிறார்" என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தாயா?' என்கிறாள்
ஆண் - 'நான் ஹும்ஸ் எழுதிய' "நான் எங்கே காத்திருப்பது உனக்காக” என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தேன்' என்கிறான்.
பெண் - 'அந்த புத்தகம் இல்லை, எனவே நீ என்னிடம் உள்ள கிரிஷ் எழுதிய ”மா மரத்துக்கடியில் காத்திரு” என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்' என்கிறாள்.
ஆண் - 'நாளை பள்ளிக்கு வரும்போது ”ஐந்து நிமிடத்தில் உன்னை அழைக்கின்றேன் ” என்ற ரிடெய்ல் மேனேஜ் மென்ட் புத்தகத்தை கொண்டு வா' என்கின்றான்.
பெண் - 'பகத் எழுதிய ”நான் உன் நம்பிக்கையை காப்பாற்றுவேன்” என்ற புத்தகத்தையும் கொண்டு வருகிறேன்' என்கிறாள்.
அப்போது அந்த பெண்ணின்
தந்தை - 'இவன் இவ்ளவு புத்தகத்தை படிப்பானா?' என்று கேட்கிறார்.
பெண் - 'ஆமாம் அப்பா, அவன் மிகவும் அறிவும், புத்தியும் மிகுந்தவன்' என்று கூறுகிறாள்.
பெண்ணின் தந்தை - 'நீ அவனுக்கு ராபின் ஷர்மா எழுதிய வயதானவர்கள் முட்டாள்கள் இல்லை' என்ற புத்தகத்தையும் மறக்காமல் கொடு என்கிறார்..!!!'
Comments