top of page

நெகிழ வைத்த கதை



ஒரு வைத்தியர் மிக அவசரமா ஓடி வந்து ஆப்ரேஷன் அறைக்குள் ஆடைகளை மாற்றிக்கொண்ண்டு தியேட்டருக்குள் நுழைந்தார்.

அங்கு பிள்ளையின் அப்பா மிகவும் கோபத்துடன் இவ்வளவு லேட்டாவா வருவீங்க என் பிள்ளைக்கு என்னவானாலும் நடந்தா யார் பொறுப்பு என்று காரசாரமாக பேசினார்.

வைத்தியர் சிரித்த முகத்துடன் கூறினார் எனக்கு வைத்தியசாலையில் இருந்து call வந்தது அவசரமாக ஓடி வந்துடேன். பொறுமையாக இருங்கள் உங்கள் மகள் இறக்கவில்லை. நான் வந்துவிட்டேன் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.

ஆமாம் சொல்விர்கள் உங்கள் மகளுக்கு இப்படி ஒன்று நடந்தால் இப்படி லேட்டா வந்து இப்படியெல்லாம் பேசுவீங்களா எண்டார் பிள்ளையின் தகப்பனார்.

Dr சொன்னார் புன்னைகையுடன் பொறுமையாக இருங்கள் நான் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆபரேஷன் ரூம்க்கு சென்று சில மணித்தியாலங்கள் கழித்து வெளியே வந்து உங்கள் மகள் மிக்க நலமாக உள்ளார். மேலதிக விடயங்கள் nurse இடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவசரமாக புறப்பட்டு சென்றார்.

அவ்விடம் வந்த nurse இடம் தகப்பனார் பிள்ளை தொடர்பில் கேட்டுவிட்டு Dr ஏன் அவசரமா போகிறார் என்று வினவினார். அதற்கு nurse சொன்னார்.

Dr இன் மகன் நேற்று விபத்தில் உயிரிழந்தார். அவரது இறுதி கிரியை மயானத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அந்தநேரம் உங்கள் பிள்ளையின் நிலை குறித்து call பண்ணிய போது அதை விட்டு உடனே ஓடி வந்தார். ஆபரேஷன் செய்து விட்டு மீண்டும் மகனின் இறுதி சடங்கிற்கு சென்றுவிட்டார்.

தகப்பன் தான் ஆவேசப்பட்டது தவறு என்பதை உணர்ந்தார்.

நீதி யாரையும் வெளியில் பார்த்து இடை போடாதீர்கள் அவர்களுக்குள் உங்களை விட அதிகம் பொறுப்பும் கவலையும் இருந்திருக்கும். எனவே வார்த்தைகளை பேணிக்கொள்ளுங்கள்.!

Comentarios


Tags

Quik Links

Subscribe 

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page