Ingredients
Preparation
கீழேயுள்ள ஒவ்வொரு வினாவின் கீழேயும் உள்ள வாக்கியங்கள் பிழையாயின் அவற்றைத் திருத்தியும் சரியாயின் சரி எனவும் வினாவின் கீழுள்ள புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.
(1) துாரத்தில் இருக்கும் மலைகள் பார்வைக்கு சிறியதாய் தெரியும்.
(2) இக்கொடுமையைச் செய்ததது அவனா? அவளா? அன்றி அதுவா?
(3)இங்கு பல்வேறுபட்ட பறவைகளையும் மிருகங்களையும் காணலாம்.
(4) பணத்தையாவது அல்லது பத்திரத்தையாவது குறித்த காலத்தில் தராவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
(5) சகாதேவன் கல்வியறிவு ஒழுக்கங்களில் சிறந்தவன்.
(6) இளங்கோவின் தந்தை மிக நல்ல மனிதர் ஆகும்.
(7) முன்னாள் பாடசாலை அதிபர் வருகை தந்தார்.
(8) பல மருத்துவமனைகள் தங்கள் ஆய்வுகூடங்களில் இந்த கருவியை வைத்திருக்கிறது.
(9) ஒவ்வொரு பூக்களுமே உன்பெயர் சொல்கிறதே.
(10) எந்தவொரு பாடசாலைகளும் செய்யாத சாதனையை மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி நிலைநாட்டியுள்ளது.
(11) பிரதமர் தன் தாய்நாட்டுக்காக கடுமையாக உழைத்தார்.
(12) தமிழ்மொழிச் சட்டததை உருவாக்க அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேணடும்.
(13) முன்னாள் பாடசாலையின் அதிபர வருகை தந்தார்.
(14) நேற்றும் இன்றும் நாளையும் கடுங்காற்றுடன மழை பெய்யும்.
(15) சுயேட்சை வேட்பாளர்கள் பலர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
(16) வித்துவ சிரோண்மணி கணேசையர் ஈழத்தின தலைசிறந்த புலவர் ஆவார்.
(17) என்னுடன் அதிகாரி செந்தில்நாதன் உடன் வந்தார்.
(18) நீங்கள் குடிப்பது பாலா அல்லது மோரா என்ற ு கூறுங்கள்.
(19) ஆசிரியர் தமிழ் ஆங்கிலம் மற்றும் சமயம் ஆகியவற்றை கற்பிப்பதில் வல்லவர்.
(20) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளன.
(21) பூனைகள் இங்கு வரமாட்டாது ஆகவே கவலை வேண்டாம்.
(22) இலங்கையின் பல பாகங்களில் வெப்பநிலை கூடியே காணப்பட்டன.
(23) அளவுக்கு மிஞ்சிய உணவும் அளவுக்கு மிஞ்சிய பணமும் மனிதனுக்கு கெடுதல்.
