top of page

7. தொடர்மொழிக்கு ஒரு மொழி

Prep Time:

Cook Time:

Serves:

Level:

About the Recipe

Ingredients

Preparation

அகர வரிசைப்படி சொற்களுக்குப் பொருள் தருவது - அகராதி

தாய் தந்தையரை இழந்தவன் - அநாதை

சிறைத் தண்டனை பெற்றவன் - கைதி

ஒருவர்/ஒரு பொருள் தன் கதையைக் கூறுவது - சுயசரிதை

வழக்கைத் தாக்கல் செய்ப்பவன் - வாதி

வழக்கில் குற்றம் சாடடப்படுபவன் - பிரதிவாதி

சுதந்திரமற்று வாழ்பவன் - அடிமை

அரண்மனையில் பெண்கள் வாழுமிடம் - அந்தப்புரம்

வீண் செலவு செய்ப்பவன் - ஊதாரி

தேர்தல் ஒன்றில் போட்டியிடுபவன் - வேட்பாளர்

நடக்க இருப்பவற்றை முன்கூட்டியே கூறுபவன் - தீர்க்கதரிசி

விசாரணை முடிவில் நீதிபதியால் வழங்கப்படுவது - தீர்ப்பு

முனிவர்கள்(துறவிகள்) வாழுமிடம் - ஆச்சிரமம்

நூலுக்கு இன்னொருவரால் வழங்கப்படும் உரை - அணிந்துரை

மற்றவர்களைப் பற்றி அக்கறையில்லாதவன் - சுயநலவாதி

அறிஞர் பலர் முன்னிலையில் புதிதாக அல்லது முதல்முதலில் நூலையோ, கலை நிகழ்ச்சியையோ செய்தல்- அரங்கேற்றம்

வயோதிபம் அடையாமல், எதிர்பாராமல் இறத்தல் - அகாலமரணம்

ஒரேநேரத்தில் எட்டு விடயங்களை அவதானிக்கும் ஆற்றல் படைத்தவன்- அட்டாவதானி

மாலையில் அல்லது இரவில் கூடும் சந்தை- அல்லங்காடி

உலக நடையறிந்து ஒழுகுதல்- ஒப்புரவு

ஒருவர் இறந்த பின் அவரின் உறவினர் (பெண்கள்) அவரை நினைத்து புலம்பி அழுதல் - ஒப்பாரி

மேடையேற்றுமுன் எந்த நிகழ்ச்சியையும் சரி பிழை பார்த்தல் - ஒத்திகை

தனக்கான உணவை வேறோர் பிராணியிடமோ, தாவரத்திலோ இருந்து உறுஞ்சி வாழுவது - ஒட்டுண்ணி

ஐந்து உனர்வுகள் - ஐம்புலன்

தாமே எல்லாப் பொருளையும் அனுபவித்தல் - ஏகபோகம்

ஆணோ, பெண்ணோ அல்லாதவர் - அலி

ஒருவருக்குரிய சொத்துக்கள் - ஆதனம்

சொல்லத் தகாத சொல்லை மறைத்து வேறோர் வகையில் சொல்லல்- இடக்கரடக்கல்

நெடுங்காலம் வாழ்பவன் - சிரஞ்சீவி

வருடம் தோறும் பிறந்தநாள் அன்று எடுக்கப்படும் விழா- ஜயந்திவிழா

நூறு ஆண்டுகள் கொண்ட காலம் - சதாப்தம்

ஒருவருக்கு லஞ்சமாக வழங்கப்படும் பணம் - கையூட்டு

ஒருவரை பார்க்கச் செல்லும் போது கொண்டுசெல்லப் படும் உபகாரப்பொருள் - கையுறை

தாமே தமது நோய்க்கு செய்யும் மருந்து - கைம்மருந்து

ஒருவரிடம் தன்னை ஒப்படைத்தல் - சரணாகதி

சமயப்பணி செய்யும் இடம் - ஆதினம்

புத்தக வடிவில் வரும் பத்திரிகை - சஞ்சிகை

அறிஞர் கூடி வாதிடும் களம் - பட்டிமன்றம்

ஒருவர் தோன்றி மறையும் வரையுள்ள காலம் - தலைமுறை

கடற்கரையில் மீன் பிடித் தொழிலாளர் தங்கி இருக்கும் இடம் - வாடி

கடவுளுக்கோ பெரியோருக்கோ சமர்ப்பிக்கப்படும் பொருள் - காணிக்கை

கொலை, களவு, கள், காமம், குருநிந்தை எனும் ஐந்தும் - பஞ்சமாபாதகம்

அனைத்து உடைமைகளையும் இழந்தவன் - அகதி

போர் வீரர் அணியும் பாதுகாப்புக் கருவி/உடை - கவசம்

ஒருவருக்கு ஏற்பட்ட நட்டத்துக்கு வழங்கப்படும் பணம் - நட்ட ஈடு

பிள்ளை இல்லாது இருப்பவள் - மலடி

இறந்தவர்களுக்குச் செய்யப்படும் கடன்கள் -பிதிர்க்கடன்

கற்று மணம் முடிக்காது இருப்பவன் - பிரமச்சாரி

குழைந்தை உறங்கப்பாடும் பாட்டு - தாலாட்டு

ஏற்றுமதி / இறக்குமதிப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி - சுங்கவரி

மனைவியை இழந்தவன் - தபுதாரன்

கணவனை இழந்தவள் - விதவை

முனிவர்கள் தவம் செய்யும் காடு- தபோவனம்

ஒருவர் தன்னைப் பற்றி தானே எழுதுவது - சுயசரிதை

புராதன பொருட்களைச் சேமித்து வைக்கும் இடம் - நூதனசாலை

நூலாசிரியர் நூலைப்பற்றி தானே எழுதும் உரை - முன்னுரை

தனது நாட்டை நேசிப்பவன் - தேசாபிமானி

எதிர் காலத்தை அறியும் ஆற்றல் படைத்தவன் - தீர்க்கதரிசி

நிலத்தின் கீழ் அமைக்கப்படும் வழி - சுரங்கம்

பல விடயங்களைத் திரட்டித் தரும் நூல் - கலைக்களஞ்சியம்

ஒருவராலும் படைக்கப்படாமல் தாமே தோன்றுவது - சுயம்பு

மேலும் செலுத்தப் படவேண்டிய தொகை - நிலுவை

ஒரு சொல்லையோ, சொற்றோடரையோ இருபொருள் படத் தொடுப்பது -சிலேடை

நிலத்தின் உரிமை கொண்டாடுவதற்குச் சான்றாக எழுத்துருவில் அமைந்த உறுதி - ஆவணம்

பெண்ணும் சுற்றமும் உடன்படாமல் வலிந்து கொள்ளும் மணம் - இராக்கதம்

ஒருவர் இறந்த பின்னர் செய்யப்படும் சமய சம்பந்தமான இறுதிக் கிரியைகள் - ஈமக்கிரியை

பொன்னை உரைத்து அதன் தரம் அறிய உபயோகிக்கப்படும் ஒரு வகைக்கள் - உரைகல்

ஒரு பொருளுக்கு ஒப்பாக எடுத்துச் சொல்லப்படும் மற்றுமொரு சொல் - உவமானம்

அடி தோறும் செய்யுட் சீர்களின் அல்லது வாக்கியத்தில் சொற்களில் இரண்டாவது ஒன்றிவரத் தொடுப்பது - எதுகை

முதுமைக் கால தேவைகளுக்காகச் சேமித்து வைக்கப்படும் பொருள் - எய்ப்பில்வைப்பு

அரசன் சபா மண்டபத்திலே அமைச்சர், படைத்தலைவர், அறிஞர் முதலிய பரிவாரத்தினர் சூழ வீற்றிருக்கும் இடம் - ஓலக்கம்

பேணிப் பாதுகாத்துத் தருமாறு ஒருவரை இன்னொருவரிடம் ஒப்படைத்தல் - ஓம்படை

அரசர்களுக்குரிய சோலையில் செயற்கையாக அமைக்கப்பட்ட சிறு குன்று - செய்குன்று

சஞ்சலம் என்னும் பெயரையுடைய ஆயிரம் சங்குகளின் நடுவே இருக்கும் உயர் சாதிச் சங்கு - பாஞ்சன்யம்

பொது மக்களுக்காக அரங்கிலே ஆடப்படும் கூத்துவகை - பொதுவியல்

புராணக் கதைகளை சுவைபட பிரசங்கம் செய்வோன் - பௌராணிகன்

அரசரும் செல்வரும் தமக்குக் கீழே சேவை புரிவோருக்கு வழங்கும் நிலம் - நிந்தகம்

நூலாசிரியர் தமது நூலைப் பற்றி நூல் முகப்பில் எழுதும் உரை - நூன்முகம்

தனது நாட்டை நேசிப்பவன் - தேசாபிமானி

ஆயுள் முழுவதும் பிரம்மச்சாரியாக விரதம் காத்து வாழ்பவன் - நைட்டிகன்

நகையும் பரிகாசமும் சேர்ந்து வரக் கவி புனையும் ஆற்றல் - விகடகவி

புதிதாக செய்யப்பட்ட கப்பல், தேர் முதலியவற்றை செலுத்திப் பார்த்தல் - வெள்ளோட்டம்

உயிர் துறக்கும் துணிவுடன் வட திசை நோக்கி உண்ணாதிருத்தல் - வடக்கிருத்தல்

கல்லிலேனும் செபேட்டிலேனும் பொறிக்கப்படும் ஒருவருடைய வெற்றி, புகழ் முதலியன் - மெய்க்கீர்த்தி

மன்னர்களால் செய்யப்படும் சிறப்பு - மாராயம்

இலட்சங்கோடி அளவுடைய நிதி - சங்கநிதி

ஒரே நேரத்தில் பத்து விடயங்களை அவதானிக்கும் தன்மை கொண்டவன் - தசாவதானி

பகைவருக்குக்/கெட்டவருக்குக் வழங்கப்படும் பணம் - கப்பம்

ஆதாரம் இல்லாமல்/ உண்மையில்லாமல் சொல்லப்படும் செய்தி/கதை - கட்டுக்கதை

அறிவு சார்ந்த பல விடயங்களைக் கொண்ட நூல் - கலைக்களஞ்சியம்

ஒருவருக்கு அன்பு சார்ந்து வழங்கப்படுவது - அன்பளிப்பு

அறிஞர்கள் வாதிடும் இடம் - பட்டிமன்றம்

ஒன்றாகப் படித்தவன் - சகபாடி

ஒருவர் பிறந்து இறக்கும் வரையுள்ள காலம் - ஆயுட்காலம்

முனிவர்கள் தங்கி வாழும் இடம் - பன்னசாலை

சூரியன்/சந்திரனைச் சுற்றி உள்ள வட்டம் - பரிவேடம்

ஒவ்வொரு நாளும் வெளியிடப்படும் பத்திரிகை - தினசரி

ஒருவர் பிறந்த நாடு - தாய்நாடு

பொருட்கள் உற்பத்தி செய்யும் இடம் - தொழிற்சாலை

கப்பல்கள் நங்கூரமிடும் இடம் - துறைமுகம்

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page