Ingredients
Preparation
இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே இடம்பெற்ற கடற்பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணக்கம் ஏற்பட்டது. இணக்கம் என்பதன் எதிர்ப்பதம்?
நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ. அவல் என்பதன் எதிர்ப்பதம்?
அரசியற் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். அறம் என்பதன் எதிர்ப்பதம்?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர். நுந்தை என்பதன் எதிர்பதம்?
இவணும் வாரார் எவணரோவென.
இவண் என்பதன் எதிர்ப்பதம்?
முல்லைக்கு தேரீந்தான் வள்ளல் பாரி. ஈந்தான் என்பதன் எதிர்ப்பதம்?
காய்தலின்றி நோக்கிய படைப்புகள் கவித்துவம் உடையன. காய்தல் என்பதன் எதிர்ப்பதம்?
ஊடுதல் காமத்துக்கின்பம் அதற்கின்பம். ஊடுதல் என்பதன் எதிர்ப்பதம்?
இந்த நாட்டில் வாழும் விதேசிகளும் நாட்டுநலம் பேணுகிறார்கள். விதேசி என்பதன் எதிர்ப்பதம்?
இலங்கையில் சுயாதீன ஆணைக்குழுக்கள் சில உள்ளன. சுயாதீனம் என்பதன் எதிர்ப்பதம்?
மருள் தீர்ந்த மாசறு காட்சியவர். மருள் என்பதன் எதிர்ப்பதம்?
அணுகாது தீய்க்காய்வார் போல. அணுகாது என்பதன் எதிர்ப்பதம்?
பேதைமை கொண்ட மனம் இருளில் மூழ்கியிருக்கும். பேதைமை என்பதன் எதிர்ப்பதம்?
இந்த உலகத்தில் சூக்கும வடிவில் எத்தனையோ உயிரினங்கள் வாழ்கின்றன. சூக்குமம் என்பதன்
எதிர்ப்பதம்?
நாயனையர் கேண்மை கெழீ கொளல் வேண்டும். கேண்மை என்பதன் எதிர்ப்பதம்?
மந்தமாருதம் உடலுக்கு புத்துணர்ச்சி தந்தது. மந்தமாருதம் என்பதன் எதிர்ப்பதம்?
தர்க்கமான கருத்துகள் எப்போதும் அறிவை புடம்போடுவனவே ஆகும். இங்கு தர்க்கம் என்பதன் எதிர்ப்பதம்?
ஏழு இசைகளிலும் மூழ்காத உயிரினங்கள் உலகில் அரிது. இசை என்பதன் எதிர்ப்பதம்?
சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும். துரும்பு என்பதன் எதிர்ப்பதம்?
இலங்கையின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீற்றருக்கு முன்னூற்றைம்பது நபர்கள் ஆவார்கள். அடர்த்தி என்பதன் எதிர்ப்பதம ்?
திண்மையான மனம் படைத்தவர்களை வெல்வது கடினம். இங்கு திண்மை என்பதன் எதிர்ப்பதம்?
ஆல கால விடத்தையும் நம்பலாம்.
இங்கு ஆலம் என்பதன் எதிர்ப்பதம்?
அணு அளவு என்றாலும் பிறருக்கும் பிற உயிர்க்கும் தீங்கிழைக்காதே. அணு என்பதன் எதிர்ப்பதம்?
வன்திறல் வாலிசேயும் வாள் எயிறு இலங்க நக்கான். நக்கான் என்பதன் எதிர்ப்பாற் ச ொல்?
பாணன் சூடிய பசும்பொற்றாமரை. பாணன் என்பதன் எதிர்ப்பாற் சொல்?
வஞ்சக மனம் கொண்ட கூனி கைகேயி மனத்தை மாற்றினாள். கூனி என்பதன் எதிர்ப்பாற் சொல்?
துன்று கரு நறுங்குஞ்சி எயினர் கோன். எயினன் என்பதன் எதிர்ப்பாற் சொல்?
வடவேங்கடம் முதல் தென் குமரி வரை ஆயிடைத் தமிழ். குமரி என்பதன் எதிர்ப்பாற் சொல்?
வாரொன்று மென்முலையர் ஆய்ச்சியர் கை வந்ததன் பின். ஆய்ச்சி என்பதன் எதிர்ப்பதம்?
ஐயனே அன்பின் நிறைந்தாளை உரை. ஐயன் என்பதன் எதிர்ப்பாற் சொல்?
உபாத்தியாயன் மட்டுமே வாழ்வில் ஒளியேற்றுவான் உபாத்தியாயன் என்பதன் எதிர்ப்பாற் சொல்?
பிரியாதான் தனைப் பயந்த பெரியள் என்றான். பெரியள் என்பதன் எதிர்ப்பாற் சொல்?
அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெம்கணை. நிசாசரன் என்பதன் எதிர்ப்பாற் சொல்?
ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ. வேடன் என்பதன் எதிர்ப்பாற் சொல்?
ஒவ்வொரு ஆணும் நல்ல குணவதியை துணையாய் அடைவேண்டுவர். குணவதி என்பதன் எதிர்ப்பாற் சொல்?
போன படைத்தலை வீரர் தமக்கு இரை போதா. வீரன் என்பதன் எதிர்ப்பாற் சொல்?
இறைவனது அருள்வந்து ஆடுவோன் தேவராளன் ஆவான். தேவராளன் என்பதன் எதிர்ப்பாற் சொல்?
பாடுகின்ற எல்லோரும் கவிஞர் அல்லர். கவிஞன் என்பதன் எதிர்ப்பாற் சொல்?
அவர் இந்த விடயத்தில் கைதேர்ந்த நிபுணன் ஆவார். நிபுணன் என்பதன் எதிர்ப்பாற்ச ொல்?
குரு-சிஷ்ய உறவுநிலை பெரிதும் சிறப்புடையது. குரு என்பதன் எதிர்ப்பாற்சொல்?
ஆணும் பெண்ணும் இல்லாத மூன்றாம் பாலினத்தாரில் பெண் இயல்புகளை பிரதிபலிப்போரை திருநங்கை என்பர். திருநங்கை என்பதன் எதிர் ப்பாற்சொல்?
