top of page

5. மரபுத்தொடர்

Prep Time:

Cook Time:

Serves:

Level:

About the Recipe

Ingredients

Preparation

ஆழம் பார்த்தல்

ஒருவரது அறிவு செல்வம் முதலியவற்றை அளவிடுவது


ஆறப்போடுதல்

பிற்போடுதல், காலம் தாழ்த்துதல்


கண் திறத்தல்

அறிவு உண்டாதல்


கங்கணங்கட்டுதல்

ஒரு செயலை முடிக்க முனைந்து நிற்றல்


கதை வளர்த்தல்

பேச்சை விரித்தல்


கை தூக்குதல்

துன்பத்திலிருந்து காப்பாற்றுதல்


தலை கவிழ்தல்

வெட்கமடைதல்


தட்டிக் கழித்தல்

சாக்கு போக்கு சொல்லுதல்


தாளம் போடுதல்

பிறரை மகிழ்விக்க அவர் கருத்துப்படி நடத்தல்


நாக்கு புரளுதல்

சொன்ன சொல் தவறுதல்

நட்டாற்றில் விடல்

ஆபத்து வேளையில் கைவிடல்


பூசி மெழுகுதல்

குற்றத்தை மறைக்கப் பார்த்தல்


முன்னுக்கு வருதல்

உயர்ச்சி அடைதல்


வாயூறுதல்

ஆசைப்படுத்தல்


தட்டிக்கொடுத்தல் உற்சாகப்படுத்துதல்


கானல் நீர்

கிடைக்காத ஒன்று


கரையேறுதல்

துன்பத்திலிருந்து மீளுதல்


பஞ்சாகப் பறத்தல்

அலைந்து திரிதல்


அவசரக் குடுக்கை

ஆராயாமல் செயல்படுதல், பதற்றக்காரன்


வெட்டிப் பேச்சு

வீண் பேச்சு

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page