top of page

சிக்கன் பக்கோடா

Prep Time:

Cook Time:

Serves:

Level:

பக்கோடா

About the Recipe

Ingredients



தேவையானவை


போன்லெஸ் சிக்கன் துண்டுகள் – 1/2 கிலோ


பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1


இஞ்சி பூண்டு விழுது – 1/2 மே.கரண்டி


பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி , புதினா – சிறுது


பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – 2


மிளகாய்தூள் – 2 தேக்கரண்டி


தனியாதூள் , சீரகத்தூள், சோம்புத்தூள் – தலா 1/4 தேக்கரண்டி


மிளகுதூள் – 1 தேக்கரண்டி


கான்ப்ளவர் மாவு – 1 மே.கரண்டி


ஓமம் / தனியா  – 1/2 தேக்கரண்டி


கடலைமாவு – 3 -4 மே.கரண்டி


கான்ப்ளவர் மாவு – 2 மே.கரண்டி


சோடா உப்பு – ஒரு பின்ச்


தண்ணீர் – சிறுது


எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

Preparation

செய்முறை


சிக்கன் துண்டுகளை பொடியாக நறுக்கி வைக்கவும் . அதில் மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒன்றாக போட்டு தேவைக்கு சிறுது தண்ணீர் தெளித்து ஒர்ரளவு திக்காக மாவு கலந்து வைக்கவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு பிரட்டி வைத்த சிக்கன் கலவையினை சிறுது கையில் எடுத்து சின்ன சின்ன உருண்டைகளாக போட்டு பொறித்து எடுக்கவும்.


சுவையான சிக்கன் பக்கோடா ரெடி மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page