விலங்கியல்
மிருகங்கள்
• நாய் எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும்.
• ஒரு நாய் உறங்காமல் இருந்தால் இறந்துவிடும்
• நாய்க்கு வியர்ப்பது கிடையாது.
• தோல் மூலம் வியர்வையினை வெளிவிடாத விலங்கு நாய்
• மனிதனை விட கேட்கும் திறன் கூடிய வீட்டுப்பிராணி நாய்
• பூனையின் ஒவ்வொரு காதிலும் 32 தசைகள் உள்ளன.
• பூனையின் கண்பார்வை மனிதனை விட 8 மடங்கு கூர்மையானது
• பூனைக்கு நுகரும் புலன் மனிதனை விட 14 மடங்கு அதிகம்
• இனிப்பான உணவுகளை சுவைக்க முடியாத பிராணி பூனை.
• பூனைக்கு கோயில் உள்ள நாடு எகிப்து
• யானையின் கால் தடத்தின் நீளத்தை அளந்து அதை ஆறால் பெருக்கி வரும் விடையே ஒரு யானையின் உயரம்
• யானைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவு உண்ண செலவழிக்கின்றது.
• யானைக்கு நுகரும் நரம்புகள் வாயில் அமைந்துள்ளது
• யானையின் கர்ப்பகாலம் 22 மாதங்கள்
• யானைகளின் மிக பெரிய காதுகள் உடலில் இருந்து அதிகமான வெப்பத்தை வெளியேற்ற பயன்படுகிறது.
• யானை சராசரியாக சுமார் எழுபது வருடம் வரை உயிர்வாழும்.
• யானையின் தும்பிக்கையில் எலும்புகள் இல்லை
• குதிக்க முடியாத விலங்கு யானை
• மூன்று வயிறுகள் கொண்ட உயிரினம் ஒட்டகம்
• நீந்தத் தெரியாத மிருகம் ஒட்டகம்
• 1 km தூரத்தில் இருக்கும் நீரை எளிதாக கண்டு பிடிக்கும் விலங்கு ஒட்டகம்
• உப்பு நீரை விரும்பிப் பருகும் விலங்கு ஒட்டகம்
• அதிக இரத்த ஓட்டம் உள்ள பிராணி ஒட்டகச்சிவிங்கி
• உலகின் உயரமான விலங்கு ஒட்டகச்சிவிங்கி
• ஒட்டகசிவிங்கியால் ஒலி எழுப்ப முடியாது
• அதிக இரத்த அழுத்தம் ( *BLOOD PRESSURE* )உடைய விலங்கு ஒட்டகச்சிவிங்கி
• தனது நாக்கினால் காதை சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகச்சிவிங்கி
• ஆபிரிக்கா கண்டத்தில் மட்டும் பரவலாக வாழும் உயிரினம் வரிக்குதிரை
• போலார் கரடிகள் அகச்சிவப்பு புகைப்படத்தின் கீழ் தெரியாது.
• கோலாக்களுக்கு மனிதர்களைப் போலவே கைரேகைகள் இருக்கும்.
• ஒரு கழுதை புதைமணலில் மூழ்கும் ஆனால் ஒரு கோவேறு கழுதை மூழ்காது.
• மிருகங்களிலேயே குறைந்த நேரம் தூங்கும் விலங்கு கழுதை
• குதிரைகளின் வயது அவற்றின் பற்களின் மூலம் அறியப்படும்.
• மூளை வளர்ச்சி கூடிய விலங்கு குரங்கு.
• அடிபட்டால் மனிதனை போல் அழும்பண்புடையது கரடி
• மணிக்கு சுமார் 140மைல் தூரத்தை தாவலின் மூலம் கடக்கும் விலங்கு கங்காரு
• சிவப்பு ,வெள்ளை கலந்த நிறமுடைய வியர்வையை வெளியிடும் விலங்கு காண்டாமிருகம்
• முள்ளம்பன்றி உப்பை விரும்பி உண்ணும்.
பறவைகள்
• மிகப்பெரிய உயிர் உள்ள செல் நெருப்புக்கோழி முட்டை
• மணிக்கு சுமார் 65 km நடக்கும் பறவை நெருப்புக்கோழி
• நெருப்புக்கோழி குதிரைகளைக் காட்டிலும் வேகமாக ஓடக் கூடியது.
• உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது தீக்கோழி
• நெருப்புக்கோழியானது, ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும்.
• பறவைகளில் பெரிய முட்டை இடும் பறவை நெருப்புக்கோழி.
• நெருப்புக் கோழி தனது உணவை சமிபாடு அடைய வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும்.இது மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.
• நெருப்புக் கோழி பறக்காது ஆனால் நீந்தும்
• மனிதனின் கண்பார்வையை விட நான்கு மடங்கு கண்பார்வை அதிகமுள்ள உயிரினம் கழுகு
• பறக்கும் போது தூங்கும் பறவை கழுகு
• பிணந்திண்ணிக்கழுகின் வயிற்று அமிலம் மனித வயிற்று அமிலத்தைக் காட்டிலும் 10 முதல் 100 மடங்கு வலிமை வாய்ந்ததாகும்.
• சூரியனை நேருக்கு நேர் பார்க்கக் கூடியது கழுகு
• பறவைகளில் மிக நீண்ட ஆயுளை உடையது ஆந்தை
• நீல நிறத்தை பார்க்கும் சக்தி உடைய ஒரே பறவை ஆந்தை
• ஆந்தைகள் தங்களது தலையை கிட்டத்தட்ட 360 டிகிரி திருப்பும் ஆனால் கண்களை நகர்த்த முடியாது.
• உலகின் மிகச்சிறிய பறவை கியூபாவில் காணப்படும் தேனி ஓசனிச்சிட்டு ஆகும்.
• முன்னால், பின்னால், பக்கவாட்டில் என எல்லாபக்கமும் பறக்கும் திறன் கொண்ட பறவை தேன்சிட்டு
• மிகச்சிறிய முட்டைகளை இடும் பறவை தேன்சிட்டு
• அதிக நீர் அருந்தும் பறவை புறா
• ஒரு புறாவின் எலும்புகள் அதன் இறகுகளை விட எடை குறைவாக இருக்கும்.
• பறவைகளில் நீரை உறிஞ்சிக்குடிப்பது புறா மட்டும் தான்.
• புறாவில் எண்ணெய் சுரப்பிகள் காணப்படும் பகுதி வால்
• புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ வரை பறக்கும் திறன் படைத்தது.
• மரங்கொத்திகள் உலர்ந்த மரங்களில் துளையிட்டு கூடு அமைக்கும்
• ஒரே எலும்பில் மண்டையோடும் , அலகும் கொண்ட பறவை மரங்கொத்தி
• பின்பக்கமாகவும் பறக்க முடியுமான பறவை மரங்கொத்தி
• ஒரு பச்சை மரங்கொத்தியால் நாள் ஒன்றுக்கு 2,000 எறும்புகளை சாப்பிட முடியும்.
• மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்.
• மனிதன் சிரிப்பதனைப் போன்று குரல் எழுப்பும் பறவை குக்குப் பர்ரா
• கூடு கட்டாத பறவை குயில்
• மழை வருவதை முன்கூட்டியே அறியக்கூடிய பறவை மயில்
• சிறகடிக்காமல் கடலையும் தாண்டி பறக்கும் பறவை கப்பல் பறவை
• அதிக உயரத்தில் கூடுகட்டும் குருவி வீட்டா
• சூழலை சுத்தப் படுத்தும்-தோட்டி எனவும் அழைக்கப்படுவது காகம்
• சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி துருவப்பகுதி
• கிவி பறவைகளுக்கு இறக்கை இல்லை.
• முட்டை அடைகாக்க தெரியாத பறவை குருவி
• ஜப்பானிய கொண்டை மூக்கன் பறவை உலகின் அரிதான பறவைகளுள் ஒன்றாகும்.
ஊர்வன
• உலகிலேயே பாம்புகள் இல்லாத நாடு அயர்லாந்து
• கூடு கட்டி முட்டையிடும் ஒரே பாம்பினம் ராஜ நாகம்
• உலகிலேயே நஞ்சு மிக்க மிக நீளமான பாம்பு இந்திய ராஜநாகம்
• கொம்பிலே கண்களை உடைய பிராணி நத்தை
• கழுத்திலுள்ள துளை வழியாக முட்டையிடும் உயிரினம் நத்தை ஆகும்.
• நத்தையால் தொடர்ந்து 3 ஆண்டுகள் தூங்க முடியும்
• உலகில் மிக நீண்ட நாள் உயிர் வாழும் மிருகம் "முதலை" இவை 300 ஆண்டுகள் உயிர் வாழும்.
• நாக்கில்லாத உயிரினம் முதலை
• முதலைகளால் இரும்பு ஆணியை கூட இலகுவாக ஜீரணிக்க முடியும்
• கடலில் முதலைகள் இருப்பது இல்லை.
நீர்வாழ் உயிரினங்கள்
• கழுத்து இல்லாத உயிரினம் மீன்
• மீன்கள் சுவாசிக்கும் உறுப்பு பூ
• சாகும் வரை வளர்ந்து கொண்டே இருக்கும் உயிரினம் மீன்
• நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம் டால்பின்
• டால்பின்களால் 260 மீ. வரை நீந்த முடியும்.
• மனிதனுக்கு இணையான அறிவாற்றல் உள்ள விலங்கு டால்பின்
• நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்து விடும் ஒரே மீன் சுறா மீன்
• சுறா மீன்கள் சூரியன் உதிக்கின்ற நேரத்திலும் , மறைகின்ற நேரத்திலும் மட்டும் தான் இரை தின்னும்.மற்றைய நேரங்களில் எதையும் சாப்பிடுவதில்லை
• சுறா மீனிற்கு 2 கர்ப்பப்பை உண்டு
• குட்டிபோட்டு பால் கொடுக்கும் கடல்வாழ் உயிரினம் திமிங்கிலம்
• உலகின் மிக பெரிய விலங்கு திமிங்கிலம்
• வாயில் சுவை நரம்புகள் இல்லாத பிராணி திமிங்கிலம்
• உலகில் மிக நீண்ட ஆயுள் கொண்ட உயிரினம் நீலத் திமிங்கிலம்
• உலகிலேயே அதிக எடை கொண்ட உயிரினம் நீலத்திமிங்கலம்
• நீலத்திமிங்கிலம், 33 மீற்றம் நீளம் வரை வளரும்.
• நீலத் திமிங்கிலம் 22 யானைகளின் எடைக்கு சமமாக இருக்கும்
• திமிங்கிலத்தின் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு 8000 லீட்டர்
• உலகின் மிகப்பெரிய மீன் திமிங்கலச் சுறா. இவை கிட்டத்தட்ட 40 அடி நீளத்தையும் 14 மெட்றிக் தொன்னுக்கும் அதிகமான நிறையையும் கொண்டுள்ளது
• ஒன்பது மூளை கொண்ட கடல் வாழ் உயிரினம் ஒக்டோபஸ்
• மூன்று இதயங்களை கொண்ட கடல்வாழ் உயிரினம் அக்டோபஸ்.
• ஆக்டோபஸ் விலங்குக்கு இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்
• நட்சத்திர மீன்களுக்கு 8 கண்கள் உண்டு
• நட்சத்திர மீனுக்கு மூளை இல்லை.
• உலகில் அதிக விஷத்தன்மையுடைய மீன் ஸ்டோன் பிஷ் (அவுஸ்ரேலியா )
• கூடு கட்டி வாழும் ஒரே மீனினம் ஸ்டிக்ஸ் பேக்
• எலும்புக் கூடு இல்லாத விலங்கு ஜெல்லி மீன்.
• கடற்பசு என அழைக்கப்படும் பிராணி சீல்
• நாயைவிட அதிக மோபசக்தி கொண்ட உயிரினம் விலாங்கு மீன்
• எலும்பு பச்சை நிறத்தில் இருக்கும் மீன் Garfish
• பிளாட்டிபஸ் முட்டை மற்றும் பாலை கொடுக்க கூடிய ஒரே விலங்கு. ஆனால் இது இரண்டும் விஷம் என்பதால் சாப்பிட முடியாது.
பூச்சியினங்கள்
• எறும்புகளின் ஆயுட்காலம் 10 ஆண்டு
• நுரையீரல் இல்லாத உயிரினம் எறும்பு
• வாழ்நாளில் தூங்காத பிராணி எறும்பு
• எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் உயிர் வாழும்.
• தன்னுடைய எடையைப்போல் 20மடங்கு எடையை தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம் எறும்பு
• பூச்சி இனங்களில் அதிக அறிவுடையது எறும்பு
• கரப்பான் பூச்சிக்கு சுமார் 6 ஆயிரதுக்கு மேற்பட்ட கண்கள் உண்டு
• கரப்பான்பூச்சிகள் டைனோசர்களுக்கு 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.
• தலையை துண்டிதாலும் ஒருவாரகாலம் வாழும் எனக் குறிப்பிடப்படும் உயிரினம் கரப்பான்பூச்சி
• இரண்டு இரைப்பைகளை கொண்ட பிராணி தேனி
• தேனீக்களால் பார்க்க முடியாத வண்ணம் சிவப்பு
• 12 தேனீக்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்தால் தான் நமக்கு ஒரு டீஸ்பூன் தேன் கிடைக்கும்
• சுவாசப்பை இல்லாத பூச்சி தேனீ
• மெழுகைப் பெற உதவும் பூச்சி தேனி
• கொசுக்கள் வேறு எந்த நிறத்தைக் காட்டிலும் நீல நிற வண்ணத்தால் ஈர்க்கப்படுகிறது.
• உலகில் மொத்தம் 48 வகை கொசுக்கள் உள்ளன
• கொசுக்கள் ஒ வகை இரத்தத்தை விரும்புகின்றன.
• தன் எடைக்கு நிகரான உணவை ஒரு நாளில் உண்ணும் பூச்சி வெட்டுக்கிளி
• வெட்டுக்கிளியின் இரத்தத்தின் நிறம் வெள்ளை
• வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரினம் ஈசல்
• "LADY BIRD" என்று குறிப்பிடுவது ஒரு வகையான பூச்சி
• இறக்கை இல்லாத பூச்சி பேன்
• செடிகளின் சாற்றை உறிஞ்சிக் குடித்து வாழும் பூச்சி அசுகுனி எனும் செடிப்பேன்
• ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.
• கரையான் நாள் ஒன்றுக்கு 30,000 முட்டைகள் இடுகின்றன
• சிறந்த கண்பார்வை கொண்ட பூச்சி தட்டாம்பூச்சி
• உண்ணி எனப்படும் "தொள்ளுப்பூச்சியின்" விசேட ஆற்றல் ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, பின் பனிக்கட்டி கரைந்த பின் வெளிவரும் ஆற்றல் கொண்டது
புழுக்கள்
• விவசாயிகளின் நண்பன் என்றழைக்கப்படும் உயிரினம் மண்புழு
• கண் , காது , எலும்பு இவை இல்லாத உயிரினம் மண்புழு
நுண்ணுயிர்கள்
• மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா - எர்சினியா பெஸ்டிஸ்
