top of page

மனித உடல்

இதயம்

• மனித இதயத்தின் எடை 500 கிராமை விட குறைவானது.

• ஆணின் உடலில் உள்ள இதயத்தின் எடை 230-280 கிராம்.

• ஒரு நிமிடத்தில் இதய துடிப்பு விகிதம் 72 முறை

• நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

• இதயம் ஒரு நிமிடத்தில் சுமார் 5 லிட்டர் இரத்தத்தை வெளியேற்றுகிறது.

• இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை 4

• இதயத்தில் உள்ள பம்புகளின் எண்ணிக்கை 2

• இதயம் சுருங்குவதற்க்கு தேவையான உலோக அயணி கல்சியம்

• இதயம் விரிவடைவதற்க்கு தேவையான அயணி பொட்டாசியம்

• இதயத்தை சுற்றியுள்ள உறை பெரிகார்டியம்.

• இதயத்தின் மேல் அறையின் பெயர் ஆரிக்கிள்.

• இதயத்தின் கீழ் அறையின் பெயர் வெண்ட்ரிக்கிள்.

• இதயத்தின் வலது அறைகளில் அசுத்தமான ரத்தம் உள்ளது.

• இதயத்தின் இடது அறைகளில் சுத்தமான ரத்தம் உள்ளது.

• இதயத்துடிப்பை அறிய உதவுவது ஸ்டெதஸ்கோப்.

• இதய அறைகளுக்கு இடையே வால்வுகள் உள்ளன.

• முதலில் இடமாற்றம் செய்யப்பட்ட உறுப்பு இதயம்

• கருவிலுள்ள குழந்தையின் இதயம் நான்காவது வாரத்திலிருந்து துடிக்கத் துவங்குகிறதாம்.

• கருவில் வளரும் குழந்தைகளுக்கு முதலில் வளரும் உறுப்பு இதயம்.

• இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் 20 நிமிடங்கள்

• இதயத்துடிப்பு உருவாகும் இடம் பேஸ்மேக்கர் எனப்படுகிறது.

• மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி -எஸ்.ஏ. பகுதி

• இதயமே நமது உடலின் ரத்தத்தை பம்ப் செய்து மற்ற உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது.

• நுரையீரல் பகுதியில் ஆக்சிஜன் ஏற்றப்படும் ரத்தம், இதயத்தால் பம்ப் செய்யப்பட்டு மற்ற பாகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

• இதயத்தில் இருந்து வரும் 'லப்-டப்' எனும் சத்தம் வருவதற்கு காரணம் 'இதயத்தில் உள்ள நான்கு வால்வுகளும் திறந்து மூடுவது'

• உங்கள் கையை பொத்திக் கொண்டால் என்ன அளவு இருக்குமோ, இதயம் அந்த அளவுடையதாக இருக்கும்.

• இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே மாரடைப்பை உருவாக்குகிறது.



மூளை

• நமது மூளை 6 மில்லியன் செல்களால் ஆனது

• நமது மூளையில் உள்ள நியூரோன்கள் 1400 கோடி

• மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது .

• ஒரு மனிதன் மூளையில் பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை போல் ஐந்து மடங்கு தகவல்களைச் சேமித்து வைக்க முடியும்.



எலும்பு

• மனித உடலிலுள்ள எலும்புகளின் மொத்த எண்ணிக்கை 206

• பிறந்த குழந்தையின் எலும்புகளின் எண்ணிக்கை: 306

• மனித உடலில் உள்ள விலா எலும்புகளின் எண்ணிக்கை 24 (12 ஜோடி)

• மனித உடலில்  முதுகெலும்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 33

• கழுத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 7

• மனித நடுத்தர காதில் (Stapes) உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 6

• மனித முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 14

• மண்டையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 22

• மனித மண்டையோட்டில் உள்ள எலும்புகள் 08

• மார்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 25

• Ams இல் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 6

• மனித பாதத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 33

• நமது கால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.

• காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும். ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளைக் கொண்டிருக்கும் .

• ஒவ்வொரு மணிக்கட்டில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 8

• கையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 27

• கைகளில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 6

• மனித உடலில் எலும்புகள் அதிகம் உள்ள பகுதி கைகள்

• நமது உடல் 14% சதவீதம் எலும்புகளால் ஆனது

• உங்கள் எலும்புகளில் 25% உங்கள் கால்களில் அமைந்துள்ளது.

• மனித உடலில் எளிதில் உடையும் பகுதி கழுத்துப் பட்டை எலும்பு.

• மனித உடலில் மிகவும் நீளமான எலும்பு தொடை எலும்பு

• மனித உடலில் மிகவும் சிறிய எலும்பு காதில் உள்ள ஸ்டாப்ஸ் (Stapes) என்ற எலும்பு தான்

• மனித உடலில் உள்ள மிகப்பெரிய மற்றும் வலிமையான எலும்பு: Femur



தசை

• மனித உடலில் உள்ள தசைகளின் எண்ணிக்கை 639

• மனித கையில் உள்ள தசைகளின் எண்ணிக்கை 72

• நமது ஒவ்வொரு கண்ணிலும் உள்ள தசைகள் 6

• மனிதன் சிரிக்கும் போது 17 தசைகள் இயங்குகின்றன.

• மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப் படுகின்றன .

• கண்களின் தசையானது ஒரு நாளில் 1 00,000 முறை அசைகிறது. அதற்குச் சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் நடக்க வேண்டும்.

• மனித உடலில் உள்ள மிகச்சிறிய தசை: ஸ்டாப்ஸ் (Stapes - நடுத்தர காது)

• மனித உடலில் மிக வலிமையான மற்றும் சதை அழுத்தம் அதிகம் உள்ள தசை பகுதி நாக்கு



இரத்தம்

• மனித உடலில் உள்ள இரத்தத்தின் pH மதிப்பு 7.4

• ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 4 - 5 லிட்டர்.

• புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலில் 1 கப் இரத்தம் மட்டுமே இருக்கும்

• ஒரு மனித உடலின் மொத்த எடையில் 7 முதல் 8 சத வீதம் வரை இரத்தம் இருக்கிறது.

• மனித இரத்தத்தில் 83 சதவிதம் நீர் உள்ளது.

• ஒரு சராசரி மனிதனின் இரத்த அழுத்தம் 120 - 80 Mmhg

• உணவு உண்ணா நிலையில் இயல்பான இரத்த சர்க்கரையின் அளவு 110 மி.கி. டெகிட்டர்

• சாதாரண இரத்தக் கொழுப்பு அளவு: 100 மிகி / டிஎல்

• இரத்தத்தைப் பரிசோதித்து அது ஆணின் இரத்தமா, பெண்ணின் இரத்தமா என்று சொல்ல முடியாது

• சிவப்பு ரத்த அணுக்களின் (RBC) சராசரி ஆயுள் 120 நாட்கள்

• வெள்ளை இரத்த அணுக்களின் வாழ்நாள் 10 முதல் 15 நாட்கள்

• இரத்த பாகுத்தன்மை: 4.5 முதல் 5.5

• உலகளாவிய நன்கொடையாளர் இரத்தக் குழு: O

• உலகளாவிய பெறுநர் இரத்தக் குழு: AB

• அதிகரித்த சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை: பாலிசித்தீமியா

• உடலில் உள்ள இரத்த வங்கி: மண்ணீரல்

• இரத்தத்தின் திரவப் பகுதி: பிளாஸ்மா

• மனிதனின் இரத்தம் 35 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

• உடலின் கருவிழிக்கு இரத்தம் பாய்வது இல்லை

• நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.

• இரத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி - ஹீமோகுளோபின்

• இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்

• இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள் - கீட்டோன்கள்



சுரப்பி

• மனித உடலில் உள்ள வியர்வை சுரப்பிகளின் எண்ணிக்கை 20 இலட்சம்

• ஒரு மனிதனின் ஒரு ஜோடி பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன

• மனித உடலின் மிக சிறிய உறுப்பு பீனியல் சுரப்பி

• மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி கல்லீரல்

• மனித உடலில் மிகச் சிறிய சுரப்பி தைரொய்ட்

• மனித உடலில் உள்ள மிகப்பெரிய நாளமில்லா சுரப்பி தைராய்டு

• பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் வரவே வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்கு குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.



நரம்பு

• மனித தோல் 45 மைல்கள் நரம்புகளைக் கொண்டுள்ளது.

• ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

• ஒரு சதுர அங்குல தோலில் உள்ள நரம்பு செல்கள் 1300



நுரையீரல்

• எடை குறைந்த உடல் உறுப்பு நுரையீரல்

• நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது .

• நுரையீரலில் 3,00,000 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் கோர்க்கப்பட்டால் , (அதன் நீளம் 2,400 கிலோமீட்டராக (1,500 மைல்) ஆக இருக்கும் .



குடல்

• மனித குடலின் நீளம் 8m

• சிறுகுடலின் சராசரி நீளம் 7 மீ

• பெரிய குடலின் சராசரி நீளம் 1.5 மீ



சிறுநீரகம்

• மனித உடலில் உள்ள சிறுநீரகங்களின் எண்ணிக்கை 2

• ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (FILTERS) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது .

• செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது - டயலைசர்

• சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் - 20 -25 சதவீதம்

• சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு - 2 சதவீதம்

• சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம் - புரதம் மற்றும் பாஸ்பேட் குறைந்த உணவை உட்கொள்வதால்



கருப்பை

• கருவுறாத அண்டத்தின் வாழ்நாள் காலம் 12-24 மணி நேரம்

• மனித கருப்பையின் உள் அடுக்குச் சுவரின் பெயர் - எண்டோமெட்ரியம்

• ஒரு பெண்ணின் கருப்பையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கரு முட்டை செல்கள் இருந்தாலும் 400 அல்லது சற்று மேற்ப்பட்ட செல்களுக்கு மட்டுமே புதிய உயிரை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும் .

• கர்ப்ப காலம் 280 நாட்கள் (40 வாரங்கள்)





• மனித உடலில் மிகப் பெரிய உறுப்பு தோல்

• மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கரு முட்டையாகும் .

• மனித உடலின் மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும் .

• மிகச்சிறிய செல் இரத்த அணு

• மிகப்பெரிய வெள்ளை இரத்த அணு: மோனோசைட்

• மிகச்சிறிய வெள்ளை இரத்த அணு: லிம்போசைட்

• மனித உடலில் உள்ள மிகப்பெரிய நிணநீர் உறுப்பு மண்ணீரல்

• மனித உடலில் உள்ள மிகப்பெரிய தமனி பெருநாடி

• மனித உடலில் வியர்க்காத உறுப்பு உதடு

• மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பாக்டீரியாக்கள் இருக்கும்

• மனிதனின் உறுப்பில் அதிகம் பக்டீரியாக்கள் வாழ்வது நாக்கில்

• ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 450 மைல் நீளம் முடி வளர்க்கின்றான்.

• ஒரு நடுத்தர வயது மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் 100000 Km

• மனித நகம் வளரும் வருட சராசரி அளவு 12.5 அங்குலம்

• மனித நகத்தின் தினசரி வளர்ச்சி 0.01 மி.மீ ஆகும்.

• மனித உடலின் மிக கடினமான பொருள் பற்களின் எனாமல்

• மனித உடலிலேயே மிகவும் குளிர்ந்த பாகம் மூக்கு நுனி தான்.

• மனித உடலில் உள்ள பால் பற்களின் எண்ணிக்கை  20

• ஒவ்வொரு மனிதனின் காதில் உள்ள முனைகளின் எண்ணிக்கை 3

• மனித உடலின் சராசரி வெப்பநிலை 36.9 டிகிரி செல்ஷியஸ் (36.9 C /98.4 F)

• மனித உடலில் உள்ள நீரின் சதவீதம் 65%

• மனித டி.என்.ஏ.வில் 8 லட்சம் ஜீன்கள் இருக்கின்றது.

• உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

• குரோமோசோம் எண்: 46 (23 ஜோடி)

• புதிதாகப் பிறந்த குழந்தையின் சராசரி எடை 2.6 கிலோ

• மனித உடலில் மிக அதிமாக அடங்கியுள்ள உலோகம் கால்ஷியம்.

• எமது கண்ணில் ஒளிக்கதிர்களை கட்டுப்படுத்துவது விழித்திரை

• கண்ணின் உணர்வுள்ள பகுதி விழித்திரை

• மனித கண்களால் 10 மில்லியன் வண்ணங்களை கண்டறிய முடியும்

• மனித உடலில் 0.2 மில்லிகிராம் தங்கம் உள்ளது இது பெரும்பாலும் இரத்தத்தில் காணப்படுகிறது.

• ஒரு சராசரி நான்கு வயது குழந்தை நாளொன்றுக்கு நானூறு கேள்விகள் கேட்கிறது.

• ஒவ்வொரு ஆண்டும் சராசரியான மனிதர்கள் 6,205,000 முறை கண்களை சிமிட்டுவார்கள்.

• பெண்கள் தலையில் சராசரியாக 150000 முடிகள் உள்ளன.ஆண்கள் தலையில் சராசரியாக 90000 முடிகள் உள்ளன.

• 4.2 அடிக்கும் குறைவாக உள்ள ஆண்களும் , 3.9 அடிக்கும் குறைவாக உள்ள பெண்களும் குள்ளர்களாக கருதப்படுகிறார்கள்.

• ஒவ்வொரு மனிதனும் 25 மில்லியன் தடவை தன் வாழ்நாளில் விரல்களை மூடித் திறக்கிறான்.

• மனிதர்களுக்கு வாசனை அறியும் மொட்டுக்கள் 50 லட்சம் உள்ளன.

• மனிதனால் மட்டுமே நேரான கோடு வரைய முடியும்

• உடலுக்கு நிறமளிக்கும் நிறப்பொருள் மெலானின்

• இரப்பையில் சுரக்கப்படும் என்சைம்கள் பெப்சி , ரெனின்

• ஒரு மனிதன் சாதாரணமாக பேசும்போது ஏற்படும் ஒலிச்செறிவு 60db

• 20 முதல் 20000 அளவு கொண்ட ஒலிகளை மட்டுமே நம்மால் கேட்க இயலும்.

• மூக்கினால் வெளிவிடப்படும் காற்றில் சுமார் 16% ஒக்சிசன் உள்ளது.

• மூக்கினால் உள்ளிழுக்கப்படும் காற்றில் சுமார் 21% ஒக்சிசன் உள்ளது.

• நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 20% சத வீதம் மூளைக்கு செல்கிறது

• எலும்பு மற்றும் பற்களில் உள்ள சேர்மம் கல்சியம்

• பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது .

• ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும் .

• மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

• கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் .

• கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன .

• 900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது .

• மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே . அதில் கெராடின் சத்து உள்ளது. இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும் .

• மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது .

• ஒரு ஆணின் உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உருவாகின்றன

• மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது , அவருடைய உயரம் 8 m.m. அதிகரிக்கும். தூங்கி எழுந்த பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார். இதற்கு காரணம் மனிதன் உட்காரும் போது , அல்லது நிற்கும் போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்.

• மனிதன் தன் வாழ்நாளில் தோராயமாக 50 டன் உணவையும், 50,000 லிட்டர் நீர் ஆகாரத்தையும் உட்கொள்கிறான்.

• ஒரு சராசரி மனித உடல் 30 நிமிடங்களில், அரை கேலன் தண்ணீரைக் கொதிப்பதற்க்கு தேவையான வெப்பத்தைக் கொடுக்கிறது.

• மனிதனின் , ஒரு தனித்த ரத்த அணு, மனிதனின் முழு உடலையும் சுற்றி வர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் .

• ஒரு சராசரி பெண்ணின் உயரம் , ஒரு சராசரி ஆணின் உயரத்தை விட 5 இஞ்ச் குறைவாகும்.

• மனிதனின் வயிற்றில் உள்ள செரிமான அமிலமானது துத்தநாகத்தையே கரைக்கும் சக்தி கொண்டது .

• மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு , மார்பில் முடியுள்ள ஆண்களை விட “CIRRHOSIS” (ஈரல் நோய்) என்ற நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் .

• கட்டை விரலின் நீளமும் , மூக்கின் நீளமும் சமமாகும் .

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page